கம்பீர் இடத்துக்கு வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் - ஷாருக்கான் கொடுத்த கிரீன் சிக்னல்

கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராகியுள்ளதால், கேகேஆர் அணியில் அவர் வகித்து வந்த இடத்துக்கு யாரை கொண்டு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு கவுதம் கம்பீருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட் டி20 உலகக்கோப்பை வென்றவுடன், பயிற்சியாளர் பொறுப்பு வேண்டாம் என கூறியதையடுத்து பிசிசிஐ, கவுதம் கம்பீரை நியமித்துள்ளது.

 

1 /8

கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அவரை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்குமாறு பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவரும் இந்த ஆஃபரை ஏற்றுக் கொண்டார். 

2 /8

ஏனென்றால், கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தபோது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அவர் அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக பணியாற்றினார். 

3 /8

அவரின் வழிநடத்தலின் கீழ் அந்த அணி இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைப் பார்த்தே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கேட்டது பிசிசிஐ.   

4 /8

இறுதியாக அவரும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுவிட்டதால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் வகித்து வந்த ஆலோசகர் பதவி இப்போது காலியாகியுள்ளது. 

5 /8

அந்த இடத்துக்கு யாரை நியமிக்கலாம் என அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். இப்போதைக்கு இந்த பட்டியலில் முன்னணியில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் இருக்கிறார். அவர்  ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடி இருந்தார்.

6 /8

சுவாரஸ்யமாக, கம்பீர் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோதுதான் ​​2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஐபிஎல் பட்டம் வென்றது அந்த அணியில் ஜாக் காலிஸூம் ஒருவராக இருந்தார். 

7 /8

2014 இல் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அடுத்த ஆண்டே அதாவது 2015ல் கேகேஆர்அணியின் பேட்டிங் ஆலோசகராக சேர்ந்தார். அதைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் 2019 வரை KKR உடன் இருந்தார். 

8 /8

பின்னர் தென்னாப்பிரிக்க அணியில் பேட்டிங் ஆலோசகராக சேர்ந்தார். மீண்டும் ஜாக் காலீஸ் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.