இந்த மாதம் மொபைல் வாங்க போறீங்களா... உயர் ரகத்தில் நறுக் ஸ்மாட்போன்கள் - இதோ!

சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே நிறுவனத்தின் சொந்த நாட்டில் அல்லது வேறு எங்காவது விற்க தொடங்கியிருக்கும். சில இன்னும் எங்கேயும் இதுவரை வெளிவரவில்லை. இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் சில ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காணலாம். 

  • Dec 04, 2022, 15:07 PM IST

 

 

 

 

 

1 /3

டிசம்பர் 8 ஆம் தேதி, Realme 10 Pro மொபைல் சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதில் Realme 10 Pro மற்றும் Realme 10 Pro+ ஸ்மார்ட்போன்கள் அடங்கும். Realme 10 Pro+ விலை 25,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த Realme மொபைல் 108MP கேமரா அம்சத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme 10 Pro மற்றும் Realme 10 Pro+ ஸ்மார்ட்போன்கள் இரண்டும் சீனாவில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அங்கு அதன் பின்புற கேமரா 108MP அம்சத்துடன் வெளிவந்தது.  அதில் Android Version 13 அப்டேட் செய்யப்பட்டுள்ளது

2 /3

Redmi Note 12 சீரிஸ் மொபைல் ஏற்கனவே Xiaomi நிறுவனத்தால் சீனாவில் வெளியிடப்பட்டது. Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ ஆகிய மூன்று போன்கள் இந்த சீரிஸில் உள்ளன. இவை 50 எம்பி கேமரா அம்சத்தை கொண்டுள்ளன. மீடியாடெக் டைமன்சிட்டி 1080 CPU மூலம் இவை இயக்கப்படுகின்றன.

3 /3

Samsung Galaxy M04 அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. Galaxy M04 அதிநவீன RAM plus அம்சத்துடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் இந்த திறனைப் பயன்படுத்தி தொலைபேசியின் RAM மெமரியை நீட்டிக்க முடியும். இந்த போனின் விலை ரூ.10,000க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.