போக்குவரத்து நிலை, கண்காணிப்பு கேமிரா குறித்த தகவல்களை வழங்கும் 5 செயலிகள்

போக்குவரத்து விதிகளின் படி, வேக வரம்பை மீறினால்,  அபராதம் செலுத்த வேண்டும். பல இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதால்,  அபராதம் கட்டுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.  இந்நிலையில், சாலையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீட் கேமராவைப் பற்றி முன்கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கை செய்யும், செயலிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 

1 /5

ரேடார்போட் - ஸ்பீட் கேமராக்கள் & ஜிபிஎஸ்: இந்த செயலியின் உதவியுடன்,  ஸ்பீட் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் சாலையில் செல்லும் போது அது குறித்த நோடிபிகேஷன்களை வழங்கும் இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

2 /5

ஸ்பீட் கேமரா ரேடார் டிடெக்டர்: இந்த ஸ்மார்ட்போன் செயலியை எந்த ஸ்மார்ட்போனிலும் பதிவிறக்கம் செய்யலாம். இதுவும் ராடார்போட் போல வேலை செய்கிறது. இந்த உதவியுடன், ஸ்பீட் கேமராக்கள், ஸ்பீட் பிரேக்கர்கள், குண்டும் குழியுமான சாலைகள் பற்றிய நோடிபிகேஷன்களை பெறுவீர்கள்.

3 /5

ஸ்பீட் கேமரா டிடெக்டர் - ரேடார் டிடெக்டர், ஜிபிஎஸ் மேப்ஸ்: இந்த செயலி மூலம், ஸ்பீட் கேமராக்கள், லிமிட் கேமராக்கள் மற்றும் சாலை விபத்துகள் பற்றிய  தகவல்களைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், அதன் வரைபடத்தில் வேக கேமராவையும் சேர்க்கலாம்.

4 /5

வேஸ்: இது  வரைபடம் மற்றும் வேக கேமரா கண்டறிய உதவும் ஒரு செயலி ஆகும், இதில் போக்குவரத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்ட சாலை, வேக கேமரா போன்ற தகவல்களைகொடுக்கிறது. இந்தப் பசெயலியில் ட்ராஃபிக் மற்றும் வழி பற்றிய தகவலையும் பெறலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் இருவரும் இந்த இலவச செயலியைப் பயன்படுத்தலாம்.  

5 /5

ஸ்பீட் கேமரா - ரேடார் டிடெக்டர், போலீஸ் கேமரா: இந்த செயலியில் ஸ்பீட் ரேடார், ஸ்பீட் கேமரா மற்றும் போலீஸ் கேமரா பற்றிய நிகழ்நேர எச்சரிக்கைகள் கிடைக்கும்.