ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்! ஈசியா செய்யலாம்..

அனைவருக்குமே படுக்கையறை வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். ஆண்களுக்கு நல்ல வீரியத்தை கொடுக்கும் உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கங்கள் காரணமாக, பலருக்கு படுக்கையறையில் பெரிதாக இன்பம் கிடைப்பதில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது. இதை, நாம் சில உடற்பயிற்சிகளை செய்வதால் சரி செய்யலாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் தெரியுமா?

1 /8

ஆண்களுக்கு வீரத்தை அதிகரிக்க, உடற்பயிர்சிகளுடன் சேர்த்து கட்டுக்கோப்பான டயட் உணவுகளும் உதவும். இங்கு, நல்ல உடலுறவுக்கு உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து பார்க்கலாம். 

2 /8

நடைப்பயிற்சி: சிம்பிளாக தோன்றினாலும், இது அனைவருக்கும் உடல் எடையை குறைக்க உதவும் நல்ல உடற்பயிற்சியாகும். தினமும் 15 - 30 நிமிடங்கள் வரை இதை செய்தால், ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

3 /8

தொடை உடற்பயிற்சிகள்: தொடை சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை செய்தால், ஆண்களால் படுக்கையறையில் வீரியத்துடன் செயல்பட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

4 /8

புஷ் அப்: வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி இது. படுக்கையறையில் நீண்ட நேரம் நீடிக்கவும், பார்ட்னரை திருப்தி படுத்தவும் உதவும் உடற்பயிற்சி இது. 

5 /8

ப்ராணாயமம்-மூச்சு பயிற்சி: வீட்டில், அலுவலகத்தில், பயணிக்கும் போது கூட இந்த பயிற்சியை செய்யலாம். இது, உங்கள் உடலையும் மனதையும் சாந்தப்படுத்த உதவும். இதனால், நீங்கள் படுக்கையில் நிதானமாக செயல்படலாம். 

6 /8

பெல்விக் உடற்பயிற்சிகள்: படுத்துக்கொண்டு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளுள் ஒன்று இது. இது உங்கள் குடல் இயக்கத்திற்கு உதவுவதோடு, பாலியல் உணர்வு மற்றும் உச்ச உணர்வை அதிகரிக்கவும் உதவுமாம்.  

7 /8

ப்ளாங்க்: கொழுப்பை எரிக்க, உடலை குறைக்க உதவும் உடற்பயிர்சிகளுள் ஒன்று, ப்ளாங்க். இது உடலுறவு செயல்பாட்டையும் அதிகரிக்குமாம்.

8 /8

சிறுநீரை அடக்குதல்: இந்த முறை, பல நேரங்களில் படுக்கையறையில் பல மணி நேரம் தாக்குப்பிடிக்க உதவுவதாக சில மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுநீர் வரும் போது, அதை அடக்க முடியும் வரை அடக்கி பின்பு கழிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் செய்கையில் படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க முடியுமாம்.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)