மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஷாங்காய் டிஸ்னிலேண்ட்

வால்ட் டிஸ்னியின் ஷாங்காய் தீம் பார்க் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஜூன் 30ம் தேதியன்று ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட் தீம் பார்க் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து குவிந்தனர்.

1 /5

சீனாவின் வணிக மையமான ஷாங்காயில் கோவிட் வழக்குகள் அதிகரித்ததால் மார்ச் 21 அன்று பூங்கா மூடப்பட்டது, பிறகு இரண்டு மாதங்கள் நீடித்த லாக்டவுனுக்குப் பிறகு  ஜூன் 1 ஆம் தேதி டிஸ்டின் ரிசார்ட் சில பகுதிகள் திறக்கப்பட்டன. கடைசியாக தீம் பார்க் திறக்கப்பட்டது (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

2 /5

தீம் பார்க் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணாகானவர்கள் வந்தனர். (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

3 /5

தீம் பார்க்கிற்கு வருபவர்கள், முகக்கவசங்கள் மற்றும் வழக்கமான கோவிட் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.   (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

4 /5

தீம் பார்க் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, ஷாங்காய் மற்றும் பிற நகரங்களில் உள்ள பொதுப் பகுதிகளுக்கான விதிகளுக்கு இணங்க, கடந்த 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் சோதனை எதிர்மறையானதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

5 /5

மார்வெல் யுனிவெர்ஸ் பகுதி திறக்கப்படவில்லை.  (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)