மோசமான சாதனையை போட்டி போட்டு படைத்த பாகிஸ்தான் பவுலர்கள்..!

உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஷகீன் அப்ரிடி படைத்தார்.

 

1 /7

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.   

2 /7

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகாள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர்.   

3 /7

பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 10 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் நட்சத்திர பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராஃப் 10 ஓவர்களில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.  

4 /7

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். ஆனால் இந்த மோசமான சாதனை 17 நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது. இதன்பின் பந்துவீசிய ஷாகின் அப்ரிடியின் கடைசி ஓவரில், 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக ஷாகின் அப்ரிடி 10 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக் கொடுத்தார்.  

5 /7

இதன் மூலம் ஹாரிஸ் ராஃபின் சாதனையை சில நிமிடங்களிலேயே ஷாகின் அப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில் ஷாகின் அப்ரிடி 6வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்ததே சாதனையாக உள்ளது.   

6 /7

மேலும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகின் அப்ரிடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஷாகின் அப்ரிடி விளையாடிய கடைசி 23 ஒருநாள் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி வந்துள்ளார்.     

7 /7

இன்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் சான்ட்னர் கொடுத்த கேட்சையும் ஹசன் அலி தவறவிட்டார். இதன் மூலம் 23 போட்டிகளுக்கு பின் முதல்முறையாக ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்த முடியாமல் இருக்கிறார்.