SBI Yono செயலியின் புதிய விதி: லாக்-இன் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கான முக்கியமான செய்தியாக இருக்கும். மொபைல் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பேங்கிங்கை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. 

 

இதன்படி, வாடிக்கையாளர்களின் எந்த மொபைல் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த போனிலிருந்துதான் வாடிக்கையாளர்கள் யோனோ செயலியில் லாக் இன் செய்ய முடியும். அதாவது, நீங்கள் மற்ற மொபைல் எண்ணிலிருந்து யோனோ செயலியில் வங்கி சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக்க எஸ்பிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

1 /4

இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புதிய பதிவு செய்யும்போது, வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட மொபைல் போனையே பயன்படுத்த வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. அதாவது, கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எண்ணிலிருந்து லாக் இன் செய்தால், SBI Yono பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்காது.

2 /4

வாடிக்கையாளர்கள் தங்கள் போனில் பதிவு செய்த மொபைல் எண்ணின் சிம்மை செயலியுடன் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ யோனோ தெரிவித்துள்ளது. பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் சரிபார்ப்பு, ஒரு எஸ்எம்எஸ் மூலம் செய்யப்படும். இந்த எஸ்எம்எஸ் எஸ்பிஐயின் 7718965316 என்ற மொபைல் எண்ணிலிருந்து வரும்.

3 /4

முன்னதாக, YONO SBI வாடிக்கையாளர்கள் எந்த தொலைபேசியிலிருந்தும் லாக் இன் செய்யலாம். ஆனால், இப்போது புதிய மாற்றங்களின்படி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்கும் மொபைலில் இருந்து மட்டுமே நீங்கள் YONO செயலியில் ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பெற முடியும்.

4 /4

அவ்வப்போது, ​​வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மோசடி பற்றி எஸ்பிஐ மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில், இணைய பாதுகாப்பு மற்றும் மோசடிகளை தவிர்க்க வங்கி 8 குறிப்புகளை பகிர்ந்து கொண்டது. YONO செயலியும் வங்கி மூலம் புதுப்பிக்கப்பட்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.