Samsung Galaxy M52 5G அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ

Samsung Galaxy M52 5G: சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போனான Samsung Galaxy M52 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக போலந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன், M52 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட 5G பதிப்பாகும். M52 ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில்,  Samsung Galaxy M52 5G செப்டம்பர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Samsung Galaxy M52 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.

  • Sep 25, 2021, 18:49 PM IST
1 /5

சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி 6.7 இன்ச் ஃபுல் எச்டி+, 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோல்ட் பிளஸ் டிஸ்ப்ளேவுடன் இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 20: 9 ஆஸ்பெக்ட் ரேஷியோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 /5

சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி ஸ்மார்ட்போனை கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் போலந்து இணையதளத்தில் ஸ்மார்ட்போனின் பட்டியலின்படி, இந்த சாதனம் அங்கு 128 ஜிபி வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

3 /5

அமேசான் இந்தியா பட்டியலின்படி, சாம்சங் கேலக்ஸி M52 5G இன் இந்தியா வேரியன்ட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC உடன் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது.  

4 /5

சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி -யின் இந்திய விலைகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், போலிஷ் இணையதளம், இந்த ஸ்மார்ட்போன் அங்கு ரூ .32,900-க்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறுகிறது.

5 /5

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் எஃப்/1.8 லென்ஸ் உட்பட மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.