சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான தனுஷ் பட நாயகி

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். 

சாய்பல்லவி பிறந்தநாளையொட்டி, சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடியாக நடிக்கும் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

1 /4

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

2 /4

இந்தப் படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். பிக்பாஸ் சீசனிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

3 /4

டான் மற்றும் அயலான் படத்தின் பணிகளை முடித்தவுடன் இந்த படத்தில் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

4 /4

இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட்டை ராஜ்கமல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார்.