Sai Pallavi Sister Pooja Kannan Engagement: நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sai Pallavi Sister Pooja Kannan Engagement Photos: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக விளங்குபவர், சாய் பல்லவி. ‘நேச்சுரல் பியூட்டி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாய் பல்லவிக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவரது பெயர், பூஜா கண்ணன். பூஜாவிற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர், சாய் பல்லவி. இவர் இந்த மூன்று மொழிகளிலும் முக்கிய ஹீரோக்களுடன் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கிளாமர் காட்டாத நடிகைகளுள் ஒருவராக விளங்கும் சாய் பல்லவிக்கு, ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. சாய் பல்லவிக்கு ஒரு தங்கையும் உள்ளார்.
சாய் பல்லவியின் தங்கையின் பெயர், பூஜா கண்ணன். இவரும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சாயலில், தனது அக்காவை போலவே இருக்கும் இவர், செவ்வானம் எனும் படம் மூலம் அறிமுகமானார்.
பூஜா கண்ணனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைப்பெற்றுள்ளது.
பூஜா, தனது நெடுநாள் காதலரான வினீத்தை விரைவில் கரம் பிடிக்க உள்ளார். இந்த நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
பூஜா கண்ணன், நிச்சயதார்த்த விழாவின் போது தனது குடும்பத்தினர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் என குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியில் இராமாயணத்தை வைத்து எடுக்கப்படும் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர், தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படத்திலும், தெலுங்கில் தண்டேல் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது தங்கையின் நிச்சயதார்த்தத்தையும் கூடவே இருந்து நடத்தி கொடுத்திருக்கிறார்.
சாய் பல்லவியின் தங்கை பூஜாவின் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.