பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களின் Safety Rules மாற்றம் -பின்பற்றாவிட்டால் அபராதம்

நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) இரு சக்கர வாகன பயணம் தொடர்பான விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

சாலை விபத்துகளிலிருந்து பைக் ஓட்டுநர்களைப் பாதுகாப்பதற்கான விதிகளில் மத்திய அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்துள்ளதுடன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதில், பைக் ரைடர்ஸுடன் (Bike Riders), பின்னால் அமர்ந்தவர்களும் சில விதிகளை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பை மனதில் வைத்து இந்த விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை கடைபிடிக்கப்படாவிட்டால், அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

1 /6

பைக் ஓட்டுநர்களுக்காக வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, பைக்கின் பின்புற இருக்கையின் இருபுறமும் கை பிடிப்பு இருக்க வேண்டும். இது பின்புற இருக்கையில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்கு கட்டாயமாகும். (Home Photo: @NivethaJessica/Twitter)

2 /6

பைக்கின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு கை பிடிப்பு இருபுறமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, பைக்கின் பின்புற சக்கரத்தின் இடது பக்கத்தின் பாதியையாவது பாதுகாப்பாக மூடியிருக்க வேண்டும். இதனால் பின்னால் அமர்ந்திருப்பவர்களின் உடைகள் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளாது.

3 /6

பைக்கில் ஒரு கொள்கலன் வைக்க வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ், கொள்கலனின் நீளம் 550 மிமீ, அகலம் 510 மிமீ மற்றும் உயரம் 500 மிமீக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4 /6

பின் இருக்கையில் கொள்கலன் பொருத்தப்பட்டால், பைக் ஓட்டுனர் மட்டுமே பயணம் செய்ய முடியும். பைக்கின் பின்னால் சீட்டில் உட்கார அனுமதி கிடையாது.

5 /6

பைக்கின் டயர் தொடர்பாக அமைச்சகமும் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், அதிகபட்சமாக 3.5 டன் எடை கொண்ட வாகனங்களுக்கு டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6 /6

அழுத்தம் கண்காணிப்பு அமைப்பில், சென்சார் மூலம், வாகனத்தின் டயரில் காற்றின் நிலை குறித்த தகவல்களை டிரைவர் பெறுகிறார்.