இந்தியாவில் திருமணங்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு நபர்களை தாண்டி, குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் மற்றும் சமூக மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் நகர்ப்புற வாழ்க்கை மன அழுத்தம், வேலை நேரம் காரணமாக குடும்பத்தில் விரிசல் ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் புரிதல் இன்றி விவாகரத்து அதிகமாகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் அதிக எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அதில் தங்களது வேண்டியது கிடைக்காத போது அதில் இருந்து எளிதாக விலக முயற்சி செய்கின்றனர்.
பெண்களுக்கு அதிகரித்துள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அவர்களை சுயமாக நிற்கும் வாய்ப்புளை அளிக்கிறது. முக்கியமாக பொருளாதார சுதந்திரம் அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.
திருமணத்திற்கு முன்பே தம்பதியர் இருவரும் தங்களது கருத்துக்களை, வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வது நல்லது. இது நல்ல புரிதலை ஏற்படுத்தி இலக்குகளை அடைய உதவும்.
நீண்ட காலம் திருமண உறவு நீடிக்க, தம்பதிகள் தினசரி பேசுவது முக்கியம். இருவருக்கும் இடையே முறையான பேச்சு வார்த்தை இருந்தாலே குடும்பத்தில் பிளவுகள் ஏற்படாது.
திருமணத்தை பற்றிய யதார்த்தங்களை புரிந்து கொள்வது முக்கியம். எந்தவொரு உறவிலும் சண்டை வருவது சகஜம் தான், அதனால் விரக்தியடைமால் எப்படி சமரசம் செய்து என்று கற்று கொள்ள வேண்டும்.