விராட் கோலியின் அடுத்த உலக சாதனை! இந்த ரெக்கார்டை யாரும் நெருங்கக்கூட முடியாது

விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் யாரும் நெருங்கக்கூட முடியாத அரிய உலக சாதனையை படைத்துள்ளார்.

 

1 /6

விராட் கோலி என்றாலே கிரிக்கெட்டில் சாதனை மன்னன் என்று கூறலாம். இந்திய அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக சாதனைகளை ஒவ்வொரு போட்டியிலும் படைத்துக் கொண்டிருக்கிறார்.  

2 /6

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியிலும் அப்படியான அரிய சாதனை ஒன்றை இப்போது விராட் கோலி படைத்திருக்கிறார். இந்த சாதனையை எல்லாம் யாரும் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது.  

3 /6

பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்தார்.  

4 /6

இது 20 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த 100வது அரைசதம் ஆகும். இதற்கு முன்பு இப்படியொரு சாதனையை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் படைத்தது இல்லை.  

5 /6

இப்போட்டியில் ஓப்பனிங் இறங்கிய கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். இரண்டாவது பந்திலேயே பேரிஸ்டோவ் கேட்ச் மிஸ் பண்ணியதால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.  

6 /6

அதேபோல் ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த 51வது அரைசதமாகும். 17வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடும் விராட் கோலி இதுபோன்று பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் ஐபிஎல் சாம்பியன் என்பது மட்டும் அவருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது.