பிளாட் வயிறு, நச்சுனு இடுப்பு, ஒல்லியான உடம்பு வேண்டுமா... இதை செய்யுங்கள்

Weight Loss Tips In Tamil : ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் டிடாக்ஸ் தண்ணீரை குடிக்கலாம்.

Drinks To Reduce Belly Fat Quickly : தற்போது உடல் எடை அதிகரிப்பு மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. எனவே சுலபமாக உடல் எடையை குறைக்க விரும்பினால் இந்த பானங்களை தினமும் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும். 

1 /6

எலுமிச்சை நீர் மற்றும் சியா விதை இவை இரண்டும் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சியா விதை சேர்த்து அதில் சிறுது தேன் கலந்து அருந்தலாம்.

2 /6

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இவை உடல் எடையை குறைக்க உதவும். கிரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாகச் செயல்பட உதவுவதன் மூலம் எடை இழப்புக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  

3 /6

ஆப்பிள் வினிகர் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், மேலும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆப்பிள் சைடர் வினிகரை காலையில் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

4 /6

உடல் எடையை குறைக்க டிடாக்ஸ் தண்ணீரை குடிக்கலாம். இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், உடல் எடை குறைக்கும். டிடாக்ஸ் தண்ணீரை தயாரிக்க, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துண்டு இஞ்சியை ஒன்றாக தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  

5 /6

உடல் எடை குறைய சீரகம் தண்ணீர் உட்கொள்ளலாம். ஏனெனில் சீரக நீர் பசியை கட்டுபடுத்த உதவுவதுடன், கொழுப்பை எரிக்க உதவும். இதற்கு 1 டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி பருகவும்.  

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.