Ramleela: முதல்முறையாக அயோத்தியில் 'ராமாயண அவதாரம்' எடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்

முதல் முறையாக, பாலிவுட் நட்சத்திரங்களும் அயோத்தியில் நடைபெறும் பிரமாண்டமான ராம்லீலா கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்கின்றனர். ஸ்ரீராமர் ஜனித்த இடத்தில் அவரது வாழ்க்கையை சொல்லும் இந்த பிரபலமான ராம்லீலா நாடகங்களில் நாள்தோறும் புதிய கதாபாத்திரங்களும், பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்று கலக்குகிறார்கள். அவற்றில் சில புகைப்படங்கள்…  

அயோத்தியா: ராமர் பிறந்த அயோத்தி மண்ணில்  முதல் முறையாக, பாலிவுட் நட்சத்திரங்களும் அயோத்தியில் நடைபெறும் பிரமாண்டமான ராம்லீலா கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்கின்றனர். ஸ்ரீராமர் ஜனித்த இடத்தில் அவரது வாழ்க்கையை சொல்லும் இந்த பிரபலமான ராம்லீலா நாடகங்களில் நாள்தோறும் புதிய கதாபாத்திரங்களும், பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்று கலக்குகிறார்கள். ராம்லீலா நாடகங்களைப் பார்க்க பார்வையாளர்களால் வர முடியாவிட்டாலும், விர்சுவல் ராம்லீலாவை மக்கள் வீட்டில் இருந்தபடியே ரசிக்கிறார்கள்.

1 /6

ஸ்ரீராமரின் மகன்களான லவ-குசர்களின் கதையில், அங்கதனாக நடித்தவர் மனோஜ் திவாரி நடித்துள்ளார். மனோஜ் திவாரி என்றால் யாரோ ஒரு ஹிந்தி நடிகர் என்று நினைத்துவிட வேண்டாம். இவர் சாட்சாத், பா.ஜ.க எம்.பி மனோஜ் திவாரி தான்.  

2 /6

ராவணனின் கதாபாத்திரத்தில்  ஷாபாஸ் கான் நடிக்கிறார். ஸ்ரீராமரின் மனைவி ஜானகியை கடத்திச் செல்லும் காட்சி முதல் அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என அற்புதமான வில்லனாக பரிணாமிக்கிறார் ஷாபாஸ் கான். சபாஷ் கான்… 

3 /6

ராமாயணத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும்  மிகவும் வலிமையானது, தனிச்சிறப்பு கொண்டது. பாஜக எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷன், ராம்லீலா நாடகத்தில் பரதனாக தோன்றினார்.  அவர் தனது ட்விட்டரில் சில படங்களையும் பகிர்ந்துள்ளார்.

4 /6

பிந்து தாரா சிங்கின்  தந்தை தாரா சிங் பிரபல சீரியலான ராமாயணத்தில் அனுமனாக நடித்தார். இப்போது அவரது மகன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவர் தனது தந்தையை நினைவில் கொள்கிறார்.

5 /6

ராமாயணத்தின் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று அனுமனின் கதாபாத்திரம். இதை நடிக்கும் பிந்து தாரா சிங், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த மரியாதை, மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று கருதுகிறார்.

6 /6

பாலிவுட் மூத்த நடிகர் அஸ்ரானி ராம்லீலா நாடகத்தில் நாரத வேடத்தில் நடிக்கிறார்.