பக்கிங்ஹாம் அரண்மனையில் பல தசாப்தங்களாக காலத்தால் நிலைபெற்ற கலைப்படைப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து சில பிரபலமான கலைப் படைப்புகள் உங்களுக்காக...
Queen's collections: பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, அங்கிருக்கும் கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நான்காம் ஜார்ஜ் மன்னர் முதன்முதலில் ஜார்ஜ் 1820களில் கலைப்பொருட்களுக்காக ஒரு கூடத்தை உருவாக்கினார். அரிய பல கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டது. இருப்பினும், இந்த கலைப்பொருள் காட்சியகம் 1976க்கு பிறகு யாரும் முழுமையாக மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. இந்த படத்தில் உள்ள கலைப் படைப்பு கைடோ காக்னாச்சி-யின் (Guido Cagnacci) "ஜேக்கப் பீலிங் தி ரோட்ஸ்" ("Jacob Peeling The Rods) ஆகும்.
நோயால் அவதிப்படுபவரை குணப்படுத்தும் இயேசு இந்த கண்காட்சி டிசம்பர் 04 அன்று தொடங்கி 2022 ஜனவரி வரை தொடரும். அரண்மனை 2017 ஏப்ரல் முதல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது, இந்தப் பணிகள் 2027 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். அரண்மனையை புதுப்பிக்கும் செலவு, ஒட்டுமொத்த செலவு கிட்டத்தட்ட £369 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள கலைப் படைப்பு அந்தோணி வான் டிக் படைத்த (Anthony van Dyck) "கிறிஸ்ட் ஹீலிங் தி பாராலிடிக்""(Christ Healing The Paralytic") ஆகும்.
65 விலைமதிப்பற்ற ஓவியங்கள் பாதுகாப்பு தளங்களால் பாதுகாக்கப்படும் இந்த கேலரி கலைஞர்களால் கையகப்படுத்தப்பட்டது. மிகவும் பிரபலமான சில கலைஞர்களிடமிருந்து கிட்டத்தட்ட 65 விலைமதிப்பற்ற ஓவியங்களை பெற்று இந்த கேலரியை அலங்கரித்தார்கள்.
200 ஆண்டுகள் பழமையான கலைக்கூரை கலைப் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், புகழ்பெற்ற கேலரியும் 44 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகிறது. இதில் 200 ஆண்டுகள் பழமையான மேற்கூரையின் உட்புறத்தை மாற்றுவது, பழைய குழாய்களை அகற்றுவது, புதிய லிப்ட் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.