இந்த 5 வழிகளில் Tax saving செய்துகொண்டே குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம்!!

புதிய நிதியாண்டிற்கான Tax planning-ஐ துவக்கி விட்டீர்களா? இதன் மூலம் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் மற்றொரு நன்மையும் உள்ளது. அதாவது, குழந்தையின் எதிர்காலத்திற்காக நீங்கள் பதட்டமில்லாமல் பணம் சேர்க்கலாம். வரி சேமிப்பு அம்சங்களில் நீங்கள் போடும் பணம் நாளை உங்கள் குழந்தையின் எதிர்கால தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிக வரியைக் குறைக்க வரி திட்டமிடல் அவசியம். Tax Planning-ல் தபால் நிலையத்தின் சில சிறிய சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு பெரிதும் உதவும். மேலும், இவை maturity-க்குப் பிறகு நல்ல, பாதுகாப்பான வருமானமும் கிடைக்கும். அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

1 /5

தபால் அலுவலக சிறிய சேமிப்பு திட்டங்களில் PPF ஒன்றாகும். குடும்பத்தில் யார் பெயரிலும் இந்த அகௌண்டைத் திறக்கலாம். PPF-ன் லாக்-இன் காலம் காலம் 15 ஆண்டுகள் ஆகும். PPF முதலீட்டில் மூன்று வழி வரி சலுகை கிடைக்கிறது. அதாவது, முதலீட்டுத் தொகை, வட்டி மற்றும் முதிர்வு ஆகியவற்றிற்கு வரிச்சலுகை உள்ளது. நீங்கள் ஒரு வருடத்தில் ரூ .1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 ரூபாய் முதலீடு அவசியம். இந்த கணக்கை தபால் அலுவலகம் மற்றும் வங்கியிலும் திறக்கலாம்.

2 /5

NSC இல் முதலீடு செய்தால், 80C இன் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது. இதில் ஆண்டு வட்டியும் கிடைக்கிறது.  என்.எஸ்.சி.யில் வெறும் ரூ .100 முதலீட்டுடன் தொடங்கலாம். ஒருவர் தபால் நிலையத்திலிருந்து NSC-ல் எளிதாக முதலீடு செய்யலாம். தங்களுக்கும், குழந்தைகளுக்கும், கூட்டாகவும் இந்தக் கணக்கைத் திறக்க முடியும்.

3 /5

வீட்டின் மகள்களுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்புக்கான ஒரு சிறந்த வழியாகும். சுகன்யா, மத்திய அரசின் ஒரு சிறிய சேமிப்புத் திட்டம். பெண் குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தைக்கு 10 வயது ஆகும் முன் இந்த திட்டத்தில் பணம் சேர்க்கலாம். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ .250, அதிகபட்சமாக ரூ .1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மகளுக்கு 21 வயதாக இருக்கும்போது, ​​கணக்கு mature அடையும். இதில் கிடைக்கும் மொத்தத் தொகை பயனுள்ளதாக இருக்கும். இதில், நீங்கள் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்

4 /5

Tax saver FD அதாவது fixed deposit போன்றது. இதில் முதலீடு செய்தால், 80 C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். 80 C-ன் கீழ், 1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. Tax saver FD –ல் 5 ஆண்டுகளுக்காக லாக்-இன் காலம் உள்ளது.

5 /5

இந்த திட்டங்களில் முதலீடு செய்வதால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். பிரிவு 80 சி இன் கீழ் பல முதலீட்டு அம்சங்கள் உள்ளன. 80 சி கீழ் மொத்த வரி விலக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் ஆகும்.