கொரோனாவை விரட்ட, வீடுகள் தோறும் தீபம் ஏற்றுமாறு, பிரதமர் நரேந்திரமோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து, தீபம் ஏற்றியதால், இந்தியா இருளில் ஒளிர்ந்தது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, தனது இல்லத்தில் இரவு 9 மணிக்கு பிரமாண்ட குத்துவிளக்கில் எண்ணைய் ஊற்றி, திரியில் விளக்கேற்றினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இரவு 9 மணிமுதல் ஒன்பது மணி 9 நிமிடங்கள் வரை, நாடு முழுவதும் மக்கள், ஓரணியில் நின்று, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் மற்றும் செல்போன் ஒளி மூலம் ஒற்றுமையை நிரூபித்ததால், இந்தியா தீபத்தில் ஒளிர்ந்தது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று இரவு 9 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் அகல் விளக்கு ஏற்றினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றிய இந்திய ராணுவத்தினர்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் நடிகை நயன்தாரா.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமது இல்லத்தில் தனது மனைவியுடன் இணைந்து, அகல் விளக்கு ஏற்றினார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விளக்கேற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் சச்சின் ஆதரவு.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் தொழிலதிபர் ரத்தன் டாடா.
பிரதமரின் வேண்டுகோளையடுத்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினிகாந்த்.