SBI வழங்கும் 3 in 1 account: இலவச ATM Card, மலிவான கடன் வசதி, இன்னும் பல நன்மைகள்

SBI Power Demat Account: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI அவ்வப்போது தன் வாடிக்கையாளர்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, SBI பவர் டிமேட் கணக்கை வாடிக்கையாளர்களுக்காக வழங்குகிறது. 

இது வாடிக்கையாளர்களுக்கு SBI சேமிப்பு கணக்கு, SBI டிமேட் கணக்கு மற்றும் SBI வர்த்தக கணக்கு ஆகியவற்றின் பயனைப் பெற அனுமதிக்கிறது.

1 /5

இந்த தனித்துவமான SBI கணக்கில், வாடிக்கையாளருக்கு SBI-யில் சேமிப்புக் கணக்கும், SBI கேப் செக்யூரிட்டீஸ் லிமிடெட் உடன் டிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தக கணக்கும் இருக்கும். SBI பவர் டிமேட் கணக்கின் விவரங்களை, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான onlinesbi.com-ல் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.

2 /5

இந்த 3-இன் -1 கணக்கில், SBI வாடிக்கையாளரால் தனது பத்திரங்களை (securities) ஆன்லைனில் அடகு வைத்து SBI –யிலிருந்து கடன் பெற முடியும். SBI-ல் அவரது டிமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு இருப்பதால் இந்த வேலை மிகவும் சுலபமாக நடந்துவிடும். SBI பவர் டிமேட் கணக்கு வைத்திருப்பவர் IPO-வுக்கு விண்ணப்பித்து, நிறுவனம் வாடிக்கையாளருக்கு IPO-வை ஒதுக்குகிறது என்றால், அந்த சூழலில் செக்யூரிடி இருப்பு பரிமாற்றம் எளிதாகவும் வேகமாகவும் நடக்கும். கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ .50,000 வரை இருப்பு இருந்தால், அவர் எந்தவொரு பராமரிப்பு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், ரூ .50,001 முதல் ரூ .2 லட்சம் வரை வைத்திருப்பவர்கள், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ .100 செலுத்த வேண்டும்.

3 /5

இந்த 3 இன் 1 SBI கணக்கில் SBI, சேமிப்பு கணக்கை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், ஒருவர் வங்கியிலிருந்து இலவச SBI ஏடிஎம் கார்டையும் பெற முடியும். இந்த SBI கணக்கு வைத்திருப்பவர்கள் SBI ஏடிஎம்மிலிருந்து தங்களது மொபைலை ரீசார்ஜ்ஜும் செய்து கொள்ளலாம். 

4 /5

SBI சேமிப்பு கணக்கு, SBI டிமேட் கணக்கு மற்றும் SBI வர்த்தக கணக்கு ஆகியவற்றின் இந்த ஒருங்கிணைந்த தளத்தில், வங்கி வாடிக்கையாளர் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஆன்லைனில் பத்திரங்களை மாற்றலாம், அடகு வைக்கலாம் அல்லது விடுவிக்கலாம். ஒருவரின் டிமேட் கணக்கு விவரங்கள், ஹோல்டிங்குகளின் அறிக்கைகள், பரிவர்த்தனைகளின் அறிக்கைகள் மற்றும் ஆன்லைனில் பில்லிங் அறிக்கை ஆகியவற்றைக் காணலாம். onlinesbi.com இல் SBI இணைய வங்கி வசதி உள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட SBI கஸ்டமர் கேர் சப்போர்ட் 24X7 கிடைக்கும். இந்த சேவை SBI வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் ஆவண தேவை இல்லாத இலவச வர்த்தக அனுபவத்தை வழங்க சேமிப்பு வங்கிக் கணக்கு, டீமேட் கணக்கு மற்றும் ஆன்லைன் டிரேடிங் கணக்கு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது.

5 /5

SBI பவர் டீமேட் கணக்கில், SBI ஒரு வைப்புத்தொகை பங்கேற்பாளராக உள்ளது. இது தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை லிமிடெட் (NSDL) மற்றும் மத்திய வைப்பு சேவைகள் லிமிடெட் (CDSL) ஆகிய இரண்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1,000 SBI கிளைகள் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கி அதன் டிபி செயல்பாட்டை இயக்குகிறது.