ஆதாரில் உள்ள மொபைல் எண் மற்றும் மின் அஞ்சலை இந்த எளிய வழிகளில் ஆன்லைனிலேயே சரி பார்க்கலாம்!!

இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு ஆவணமாக, ஒரு அடையாளமாக இன்று மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அதன் பயன்பாடுகள் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், ஆதாரில் உள்ள உங்களது அனைத்துத் தகவல்களையும் தேவைப்படும் போது புதுப்பிப்பது அவசியமாகும். குறிப்பாக, மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் (Email ID and Mobile Number) ஆகியவற்றை புதுப்பிப்பது (Update) மிகவும் முக்கியம். ஏனெனில் இவை தகவல்தொடர்புக்கான தளங்களாகும். இவை இல்லாமல், ஆதார் எண்ணை சரியாக பயன்படுத்துவதில் பல சிரமங்கள் வரக்கூடும். இந்த இரண்டு விவரங்களையும் நீங்கள் வீட்டிலிருந்தபடியே சரிபார்க்கலாம். இதற்காக, ஆதார் வழங்கும் Organisation UADAI ஆன்லைன் வசதியையும் வழங்குகிறது.

1 /5

UIDAI பதிவுகளில் உள்ள உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் சரியானதா இல்லையா என்பதை சரிபார்க்க, முதலில் ஆதாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.uidai.gov.in –க்கு செல்லவும். 

2 /5

இப்போது உங்கள் முன்னால் ஹோம் பேஜ் திறக்கும். இதில், ‘Aadhaar Services’ பிரிவுக்குச் சென்று, கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, ‘Verify Email/Mobile Number’ ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.

3 /5

இதைச் செய்த பிறகு நீங்கள் அடுத்த பக்கத்தில் இருப்பீர்கள். இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை இங்கே உள்ளிட்டு பின்னர் கீழே மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண்ணை உள்ளிடவும். பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும். பின்னர் Send OTP ஐக் கிளிக் செய்யவும்.

4 /5

இதைச் செய்தபின், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இப்போது அடுத்த பக்கத்தில் OTP ஐ உள்ளிட்டு, Proceed to Verify என்பதைக் கிளிக் செய்யவும். 

5 /5

கிளிக் செய்யும் போது, ​​ஒரு புதிய பக்கம் உங்களுக்கு முன்னால் திறக்கும். அதில் மொபைல் எண்/மின்னஞ்சல் பொருந்துகிறது என்று எழுதப்பட்டிருக்கும். இந்த வகையில் ஆதாரில் உள்ள உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஆன்லைனிலேயே சரிபார்த்துக்கொள்ளலாம்.