Gold Silver KYC: நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் KYC ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்க நகைகள் வாங்குவது தொடர்பான KYC விதிகளில் எழும் குழப்பங்கள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தங்க நகைகள் வாங்குவது தொடர்பான KYC ஆவணங்கள் குறித்து பல செய்திகள் வந்தன. அந்த செய்திகள் குறித்து வருவாய் துறை (DoR) ஒரு விளக்கம் அளித்துள்ளது.
வருவாய் துறை (DoR), வாடிக்கையாளர்கள், 2 லட்சம் ரூபாய் வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால், அதற்கு ஆதார் அல்லது PAN-ஐ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, அதாவது எந்த KYC க்கும் தேவை இல்லை என கூறியுள்ளது.
ஆதாரங்களின்படி, டிசம்பர் 28, 2020 அன்று, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரூ .10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்து தங்கம் வெள்ளி வாங்குபவர்களின் KYC –ஐப் பெற்று சரிபார்க்குமாறு தங்கம் வெள்ளி விற்பனையாளர்களை FATF (நிதி நடவடிக்கை பணிக்குழு) கோரிக்கை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது.
FATF என்பது உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை கண்காணிக்கும் ஒரு அமைப்பாகும். FATF என்பது சட்டவிரோத நிதி மற்றும் பணமோசடிகளைத் தடுக்க சர்வதேச தரத்தில் செயல்படும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு அப்பால் (டாலர்கள் / யூரோ 15,000) பண பரிவர்த்தனை செய்தால், அவர்கள் ட்யூ டெலிஜன்ஸ் (CDD) விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என டிபிஎம்எஸ் துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவும் 2010 முதல் FATF இல் உறுப்பினராக உள்ளது.
சில ஊடகங்கலில், 2 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வெள்ளி வாங்கினாலும் KYC அளிக்க வேண்டியது கட்டாயமாகும் என வரும் செய்திகள் ஆதாரமற்றவையாகும். வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 269ST இன் கீழ் இந்தியாவில் ரூ .2 லட்சத்துக்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், விநியோகஸ்தர்கள் ரூ .2 லட்சத்துக்கு மேல் பணத்தை வாங்கவில்லை என்றால், அது தற்போதுள்ள வருமான வரி இணக்க சட்டத்தின் படிதான் இருக்கும். இந்த அறிவிப்பு அவர்களுக்கு பொருந்தாது.