இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மீண்டும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடக்கவுள்ளது. IPL 2021, ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லீக்கில், பேட்ஸ்மேன்கள் எப்போதும் பந்து வீச்சாளர்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவது வழக்கம்.
கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் ஐபிஎல்லில் ஒரே இன்னிங்ஸில் அதிக ஸ்கோரைப் பெற்றுள்ளனர். ஒரே இன்னிங்சில் அதிரடியாக ஆடி அதிகப்படியான ஸ்கோர்களை அள்ளிய சில வீரர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
மேற்கு இந்திய பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 17 சிக்ஸர்களை அடித்தார். ஒரு டி-20 போட்டியில் ஒரு வீரர் ஒரே இன்னிங்சில் அடித்துள்ள அதிகப்படியான ரன்களாகும் இது.
ஐபிஎல் முதல் சீசனின் முதல் போட்டியில் KKR-ருக்காக விளையாடிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், RCB-க்கு எதிராக ஆட்டமிழக்காமல் 158 ரன்களை எடுத்தார். இதில் அவர் 13 சிக்சர்களை அடித்தார்.
ஐபிஎல்லின் மூன்றாவது அதிகப்படியான ஸ்கோரை எடுத்துள்ள Ab de Villiers, 2015 ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, வெறும் 59 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் கடைசி சீசனில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் KL Rahul, RCB பந்துவீச்சை கிழித்தார். அவர் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல்லின் அதிக ரன் இன்னிங்ஸ் பட்டியலில் Ab de Villiers-ன் பெயர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 2016 ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக Ab de Villiers ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் ஏபி 10 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களை அடித்தார்.
அதிரடியான பேட்டிங் பற்றி பேசும்போது, ரிஷாப் பந்த் பற்ரி பேசாமல் இருக்க முடியாது. 2018 ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக பந்த் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களை அடித்தார்.