பெட்ரோல் விலை உயர்வால் கவலை வேண்டாம், 5 cheap and best Electric Scooters இதோ

Cheap and Best Electric Scooter in India: அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்களை அழ வைக்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .90 க்கு அருகில் உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ .80 ஐ தாண்டியுள்ளது. மறுபுறம், கச்சா எண்ணெயின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெய் ப்ரெண்ட் கச்சா க்ரூடின் விலை பீப்பாய்க்கு 65 டாலரைத் தாண்டியுள்ளது. மத்திய பிரதேசத்தின் நிலை இதை விட மோசமாக உள்ளது. பிரீமியம் பெட்ரோலுக்குப் பிறகு, சாதாரண பெட்ரோலும் 100 ஐத் தாண்டியுள்ளது. அனுப்பூர் மாவட்டத்தில் ப்ளைன் பெட்ரோல் மிக அதிக விலையில் உள்ளது. இங்கு பெட்ரோலின் விலை 100 ரூபாய் 31 பைசா வரை உயர்ந்துள்ளது. 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் மின்சார வாகனங்களை உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று தோன்றுகிறது. இதில் நமக்கு சில நல்ல செய்திகளும் உள்ளன. நீங்கள் Electric Scooter-ஐ பயன்படுத்தினால், பெட்ரோல் செலவு குறித்த பதற்றமும் குறையும். இந்திய சந்தையில் கிடைக்கும் 5 மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை இங்கே காணலாம்.

1 /5

Cheap and Best Electric Scooter in India: ஒகினாவாவின் ரிட்ஜ் முதல் மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதன் வேகம் மணிக்கு 60 கி.மீ. இதன் விலை சந்தையில் 44,990 ரூபாய். ஸ்கூட்டரின் எடை 96 கிலோ.

2 /5

Cheap and Best Electric Scooter in India: ஆம்பியரின் 48 V -24Ah பேட்டரி சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்லும். முழு சார்ஜில், இது ஒரு மணி நேரத்தில் 45 முதல் 50 கி.மீ வரை செல்லக்கூடும். இந்திய சந்தையில் இதன் விலை 28,900 முதல் 37,488 ரூபாய் வரையில் உள்ளது. இது கருப்பு, சிவப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களில் வருகிறது.

3 /5

Cheap and Best Electric Scooter in India: பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக சந்தைக்கு திரும்பியுள்ளது. இப்போது இது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. பஜாஜ் சேதக் 3 கிலோவாட், லித்தியம் அயன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், 95 கி.மீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது. இதன் விலை ரூ .1 லட்சத்தில் தொடங்குகிறது.

4 /5

Cheap and Best Electric Scooter in India: ஹீரோவின் ஆப்டிமா ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் ஆக, 8 முதல் 10 மணி நேரம் ஆகும். இதன் வேகம் மணிக்கு 25 கி.மீ. ஆகும். சிங்கிள் சார்ஜிற்குப் பிறகு, இந்த ஸ்கூட்டர் 50 கி.மீ செல்லக்கூடும். இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. மேட் சிவப்பு, சியான் மற்றும் மேட் சாம்பல் வண்ணங்கள் இந்த நேரத்தில் சந்தையில் கிடைக்கின்றன. இது 250W திறன் கொண்ட பி.எல்.டி.சி மின்சார மோட்டார் கொண்டுள்ளது. இதன் விலை 41,770 ரூபாய் ஆகும்.

5 /5

Cheap and Best Electric Scooter in India: டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான TVS iQube, மிகவும் நேர்த்தியான ஸ்கோட்டராக கருதப்படுகின்றது. இதில், நீங்கள் 4.4 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டாரைப் பெறுவீர்கள். கூடுதலாக, இந்த ஸ்கூட்டர் ஒரு முறை முழு சார்ஜிங் செய்தபின் சுமார் 75 கி.மீ. வரை செல்லும். வேகத்தைப் பற்றி பேசினால், ​​இது மணிக்கு 78 கி.மீ வேகத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது 6 BHP பவரையும் 140 NM டார்கையும் உருவாக்குகிறது. விலை பற்றி பேசினால், ​​இந்திய சந்தையில் இதன் விலை சுமார் 1.15 லட்சம் ரூபாய் ஆகும். இது 4.2 வினாடிகளில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.