BSNL prepaid வாடிக்கையாளர்களுக்கு good news: இந்த பிளான்களில் பெரிய அளவில் தள்ளுபடி!!

BSNL தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் புதிய கிரேஸ் ப்ரீபெய்ட் 2 திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு புதிய திட்டங்களிலும் வாடிக்கையாளர்கள் 25 சதவீதம் வரை தள்ளுபடி பெறுகின்றனர். இந்த சலுகைகள் எஸ்.டி.வி 187 மற்றும் பிளான் வவுச்சர் 1,499 என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளன.

1 /5

எஸ்.டி.வி 187 திட்டத்திற்கு 187 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் புதிய தள்ளுபடியின் கீழ் இந்த ரீசார்ஜ் பிளானை நீங்கள் ரூ .139 க்கு வாங்கலாம்.

2 /5

BSNL இதில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளைச் செய்வதற்கான வசதியை வழங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இத்திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

3 /5

Plan Voucher 1,499-க்கு வாடிக்கையாளர்கள் ரூ .1,499 செலவிட வேண்டியதில்லை. BSNL-ன் இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ .1,119 செலுத்தினால் போதும்.

4 /5

ரூ .1,499 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது. மேலும், 24 ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கிறது.

5 /5

BSNL தனது வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் முடிந்ததும் மொபைல் இணைப்பை நிறுத்துவதற்கு முன் இரண்டு கிரேஸ் பீரியடுகளை அதாவது சலுகைக் கால அவகாசங்களை அளிக்கிறது. கிரேஸ் பீரியட் 1-ன் வேலிடிட்டி 7 நாட்களாகும். கிரேஸ் பீரியட் 2-வின் வேலிடிட்டி, கிரேஸ் பீரியட் 1-ன் கால அளவு முடிந்த பிறகு, எட்டாவது நாளில் தொடங்கி 172 வது நாள் வரை தொடர்கிறது. அதாவது, அதன் செல்லுபடியாகும் தன்மை 165 நாட்களாகும்.