மணமகன் மணமகளுக்கிடையில் தனி மனித இடைவெளியுடன் நடந்த திருமணம்: இதுதான் கொரோனா கல்யாணம்!!

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும். கொரோனா காலத்தில் திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு மணமகளுக்கு கொரோனா வந்தது. திருமணம் நடந்ததா? எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.

1 /5

திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மணமகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். துரதிஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. Photo Credits: Social Media

2 /5

கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகும் மணமகனும், மணமகளும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், அருகில் வராமல், அருகில் நில்லாமல், எப்படி திர்மணம் நடந்திருக்கும் எனற கேள்வி உங்கள் மனதில் எழக் கூடும். ஒரு புதிய வழியில் இருவது திருமணம் செய்து கொண்டனர். இது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. Photo Credits: Social Media

3 /5

கலிபோர்னியாவைச் சேர்ந்த தம்பதிகளான பேட்ரிக் டெல்கடோ மற்றும் லாரன் ஜிமெனெஸ் இருவரும் விசித்திரமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் தங்கள் திருமண நாளுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தனர். ஆனால் மணமகளுக்கு கொரோனா ஏற்பட்ட பிறகு திருமணம் எப்படி சாத்தியமாகும் என்ற பெரிய கேள்வி எழும்பியது. ஆனால், வித்தியாசமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். Photo Credits: Social Media

4 /5

ஜெசிகா ஜாக்சன் என்ற தொழில்முறை புகைப்படக் கலைஞர் இந்த தனித்துவமான திருமணத்தின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பகிரும்போது, ​​ஜாக்சன் தலைப்பில், “'திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு உங்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? திருமண நாள் ரத்து செய்யப்படும். அடுத்து எப்போது திருமணம் நடக்கும் என்பதில் குழப்பம் ஏற்படும். ஆனால் லாரன் ஜிமெனெஸ் தனது புத்திசாலித்தனமான யோசனையால், தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பேட்ரிக்கை மணந்தார்.” என்று எழுதினார். Photo Credits: Social Media

5 /5

இந்த தனித்துவமான திருமணத்தின் வைரல் புகைப்படங்களில், மணமகள் ஒரு ஜன்னலில் அமர்ந்திருப்பதையும், மணமகன் தரையில் நிற்பதையும் காண முடிகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் கயிற்றால் கட்டிக்கொண்டுள்ளார்கள். கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் இந்த ஜோடி மோதிரத்தை எவ்வாறு மாற்றிக்கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர் என்பதும் இடுகையில் விளக்கப்படுள்ளது. தங்களது அன்பாலும் உறுதியாலும் இந்த ஜோடி தன்னை கவர்ந்ததாகவும் ஜேக்சன் எழுதியுள்ளார். Photo Credits: Social Media