மார்ச் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய விதிகள்!

நிதி சம்பந்தமான பல முக்கிய விதிகள் கடந்த மார்ச் 1 முதல் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்து உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு செயல்படுவது உங்கள் பணத்திற்கு நல்லது. 

 

1 /5

Paytm Payments Bank மார்ச் 15 ஆம் தேதிக்குள் Paytm வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது. இதன் பிறகு Paytm வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவோ, பரிவர்த்தனைகளைச் செய்யவோ முடியாது.

2 /5

எஸ்பிஐ கடன் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 15 முதல், தனது கிரெடிட் கார்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை மாற்ற போவதாக அறிவித்துள்ளது. 

3 /5

FASTag KYC இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் FASTagல் KYC விவரங்களைப் புதுப்பிக்க மார்ச் 2024 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் உங்கள் விவரங்களை புதுப்பிக்கப்படாவிட்டால், FASTag கணக்கு செயலிழந்து விடும்.

4 /5

வரி தவணை வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்கள் வரியின் நான்காவது தவணையை மார்ச் 15 ஆம் தேதிக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும். முன்கூட்டிய வரி செலுத்தும் காலக்கெடுவைத் தவறவிட்டால், மாதத்திற்கு 1 சதவிகிதம் கூடுதல் வரி செலுத்த நேரிடும்.

5 /5

ஜிஎஸ்டி விதிமுறைகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டினால், அந்த நிறுவனத்தின் அனைத்து பி2பி பரிவர்த்தனைகளுக்கும் இ-இன்வாய்ஸ் கட்டாயம் வேண்டும். இன்வாய்ஸ் இல்லாமல் இ-பில் உருவாக்க முடியாது.