OnePlus நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங்கை (wireless charging) ஆதரிக்கும் தனது முதல் ஸ்மார்ட்போனை கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது, அது தான் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகும். நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை சற்று தாமதமாக கொண்டு வந்தாலும், வரவிருக்கும் போன்களிலும் அதை தரமாக பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் வயர்லெஸ் சார்ஜிங்குடன் வரவிருப்பது தான் OnePlus 9 Pro.
டிப்ஸ்டர் Max Jambor தகவலின்படி, ஒன்பிளஸ் 9 ப்ரோ அதன் முந்தைய மாடலான 30W வேக வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரித்த ஒன்பிளஸ் 8 ப்ரோவுடன் ஒப்பிடும்போது 45W வேக வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரவுள்ளது.
ஒன்பிளஸ் 9 ப்ரோ ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டிருக்கும், அதாவது தொலைபேசிகள், BT ஆடியோ சாதனங்கள் போன்ற பிற Qi-இணக்கமான சாதனங்கள் மூலம் வயர் இல்லாமல் சாதனத்தின் பின்புறத்தில் வைப்பதன் மூலமும் சார்ஜ் செய்ய முடியும்.
வழக்கமான ஒன்பிளஸ் 9 மாடலும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் இப்போது சார்ஜிங் வேகம் குறித்து எந்த தகவலும் இல்லை. சமீபத்திய தகவல் கசிவும் இதே செய்தியை உறுதிப்படுத்துகிறது, மேலும் ஒன்பிளஸ் 8 ப்ரோவில் 4300 mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 9 மாடலில் 4500 mAh பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 65W வயர்டு சார்ஜிங்குடன் வரும் என்பதால், இது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Key Specs > OnePlus 9 Pro Qualcomm Snapdragon 888 | 8 GBProcessor 6.7 inchesDisplay 64 MP + 16 MP + 12 MP + 2 MPRear camera 32 MPSelfie camera 4510 mAhBattery OnePlus 9 Pro Price, Launch Date Expected Price: Rs. 51,999 Release Date: 31-Jan-2021 (Expected) Variant: 8 GB RAM / 128 GB internal storage Phone Status: Rumoured