வாட்ஸ்அப் ஸ்பேம் நம்பர்களை இப்படி பிளாக் செய்யுங்கள்..!

வாட்ஸ் அப்பில் ஸ்பேம் நம்பர்களை லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 

1 /7

தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு அப்டேட்பட்டுள்ளது.  

2 /7

குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.   

3 /7

வாட்ஸ் அப்பில் ஸ்பேம் நம்பர்களை லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியே தங்கள் கைவரிசையை காட்டும் மோசடிகள் குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு, இன்ஸ்டன்ஸ் மெசேஜிங் தளத்தில் மூலம் பயனர்களை அணுகுகின்றனர்.  

4 /7

அதுவும், அண்மை காலமாக வாட்ஸ் அப் வழியே தொடர்பு கொண்டு மோசடி செய்வது அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.  அப்படி வரும் ஸ்பேம் கால்ஸ், மெசேஜ்களை தடுக்கும் விதமாக மெட்டா நிறுவனம் தனது பயனர்களும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.   

5 /7

அதாவது, ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்களை தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள வகையில் பயனர்கள் தங்கள் லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே ப்ளாக் செய்து கொள்ளலாம். இதன் மூலம், வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சியாக உள்ளது.  

6 /7

இந்த வசதியை கொண்டு பயனர்கள் ஸ்மார்ட் போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை ப்ளாக் செய்யலாம். வாட்ஸ் அப் மூலம் உங்களுக்கு ஸ்பேம் மெசேஜ்கள் வந்தால், உங்களது லாக் ஸ்கிரீனிலேயே Notification வரும். அதில், ப்ளாக் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அந்த நபரை ப்ளாக் செய்து கெள்ளலாம்.   

7 /7

மேலும், நீங்கள் ப்ளாக் செய்யும் நபரை, சம்பந்தப்பட்ட நம்பரை கிளிக் செய்து ப்ளாக் செய்யாமல் மற்றொரு ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் அப் செட்டிங்ஸ்-பிரைவதி-பிளாக்டு கான்டாக்ஸ் - ஆட் (ADD) ஆப்ஷனை கிளிக் செய்து  நம்பரை தேர்ந்தெடுத்து ப்ளாக் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.