Mercedes Benz Concept Car: இது வேறு கிரகத்தில் இருந்து வந்த கார் போல தெரிகிறதா? இல்லை... அட்டகாசமான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் வடிவமைப்பு இது...
நவீன தொழில்நுட்பத்துடன், அட்டகாசமாய் எடுக்கப்பட்ட அவதார் திரைப்படக் குழுவினரின் உதவியுடன் இணைந்து மெர்சிடிஸ் கார் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் புதிய கார் இது...
VISION AVTR இன் நியூரோ-ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு கூறுகள் நியூரோமார்பிக் வன்பொருள் என்று அழைக்கப்படும். இவை சென்சார்கள், சில்லுகள் மற்றும் பிற கூறுகளின் ஆற்றல் தேவைகளை ஒரு சில வாட்களாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
110 kWh திறன் கொண்ட பேட்டரி, 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த நவீன கார் 700 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும்
DINAMICA லெதரில் செதுக்கப்பட்டுள்ள இருக்கைகள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவை
முற்றிலும் புதிய வடிவமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தப்பட்டுள்ளது
சென்டர் கன்சோலின் மேல் கையை வைப்பதன் மூலம் உட்புறம் இயங்கத் தொடங்கும்
இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் கான்செப்ட் கார்