Hardik Pandya Natasha : ஹர்திக் பாண்டியாவை பிரிந்த பிரபல மாடல் நடாஷா ஸ்டோன்கோவிக், உடனடியாக தன்னுடைய சொந்த நாடான செர்பியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
Hardik Pandya Natasha News : பிரபல மாடலும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக், ஹர்திக் பாண்டியாவுடனான விவாகரத்துக்குப் பிறகு செர்பியா சென்று, அங்கு ஹேப்பியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இந்தியாவுக்கு நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வந்த செர்பியாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நடாஷா ஸ்டான்கோவிக், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில் விழுந்தார்.
முதலில் டேட்டிங் செய்த இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். ஆனால், இந்த திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் சுமூகமாக நீடிக்கவில்லை.
நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியாவின் குடும்ப பாரம்பரிய முறைகள் எல்லாம் புதியதாக இருக்க, அதுவும் அவருக்கு சிக்கலாக இருந்துள்ளது. கூடவே தொடர்ந்து நடிக்க வேண்டும், மாடலிங் செய்ய வேண்டும் என்ற ஆசைக்கும் முட்டுக்கட்டை விழுந்தது.
கணவர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவரும் நடாஷா நடிப்பதற்கும், மாடலிங் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதில் சுத்தமாக உடன்பாடு இல்லாமல் இருந்த நடாஷா, கடந்த ஆண்டே பாண்டியாவை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்.
அத்துடன் மும்பையிலேயே ஒரு வீடு எடுத்து அங்கு தன்னுடைய மாடலிங் நண்பர்களுடன் வசித்து வந்திருக்கிறார். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்த, விவகாரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
நடாஷா ஏற்கனவே விவகாரத்துக்கு ரெடி என்பதால், உலகக்கோப்பை வென்று முடித்து தாயகம் திரும்பிய கையோடு தன்னுடைய விவாகரத்து முடிவையும் அறிவித்துவிட்டார் ஹர்திக் பாண்டியா.
இதனால், மும்பையில் இருந்த நடாஷா இப்போது செர்பியாக்கு சென்றுவிட்டார். அங்கு முதல் நாளே ஜாலியாக சைக்கிளில் ரைடிங் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு கீழே, ஹர்திக்கை விவாகரத்து செய்த கொஞ்ச வருத்தம் கூட அவர் இல்லாமல் இருப்பது தெரிவதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.