மர்மம் என்றாலே அனைவரின் உணர்வுகளும் கூர்மையாகிவிடும். அதிலும் அது கலை தொடர்பான மர்மம் என்றால் அதிகமாவது இயல்புதான்.
உலகின் மர்மமான ஓவியங்களைப் பார்த்தால், உணர்வுகள் பறந்துவிடும், யாராலும் தீர்க்க முடியாத சஸ்பென்சையும், பல கேள்விகளையும் என்றென்றும் எழுப்பும் உலக பிரசித்தி பெற்ற ஓவியங்கள் இவை.
இன்றுவரை மர்மம் தீர்க்கப்படாத இந்த ஓவியங்கள் விசித்திரமானவை, மர்மமானவை ஆனால் மிகவும் அழகானவை.
லியோனார்டோ டா வின்சியின் ஓவியம் தலைசிறந்த படைப்பு என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எண்ணற்ற முறை வர்ணம் பூசப்பட்டது, மீண்டும் மீண்டும் சேதப்படுத்தப்பட்டது என்பதோடு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது என்றே சொல்லலாம். ஆனால்,. இதையெல்லாம் மீறி ஓவியம் அப்படியே உள்ளது.
தி ஸ்க்ரீம் ஓவியத்தின் பல பதிப்புகளைத் தயாரித்தார் எட்வர்ட் மன்ச், அவற்றில் ஒன்று ஒஸ்லோவில் உள்ள நேஷனல் கேலரியில் உள்ளது. மற்றொன்று மன்ச் மியூசியத்திலிருந்தும் எடுக்கப்பட்டது. இந்த ஓவியம் காதல், வாழ்க்கை மற்றும் இறப்பு கவிதை என்றும் அழைக்கப்படுகின்றன.
சாண்ட்ரோ போட்டிசெல்லியின் வீனஸின் பிறப்பு கேன்வாஸில் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்புகளில் ஒன்றாகும். தி பர்த் ஆஃப் வீனஸில் காட்டப்பட்ட நிர்வாணம் அந்த காலகட்டத்தில் அசாதாரணமானது. சுக்கிரனின் பிறப்பு என்ற இந்த ஓவியம் சுமார் 50 ஆண்டுகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா உலகின் மிகவும் மர்மமான மற்றும் விலையுயர்ந்த ஓவியமாகும். இந்த ஓவியத்தில் மோனாலிசாவின் உதடுகளை மட்டும் உருவாக்க 12 ஆண்டுகள் ஆனது.
பாப்லோ பிக்காசோவின் கெர்னீக்கா ஓவியத்தில் பெண்கள் முக்கிய கதாபாத்திரங்கள். கெர்னீக்கா, உலகின் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு புகழ் பெற்றது. இது உள்நாட்டுப் போர் தொடர்பான கவனத்தை ஈர்த்தது.
முத்து காதணி கொண்ட பெண் ஓவியம் உலக அளவில் புகழ்பெற்றது. ஹேக் நகரில் உள்ள மோரித்சுயிஸ் எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த ஓவியத்திற்கு "வடக்கின் மோனா லிசா" அல்லது "டச்சு மோனா லிசா" என்றும் பெயர் உண்டு