கமல்ஹாசன் பரிந்துரைக்கும் 7 அற்புத புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..

Books Recommended By Actor Kamal Haasan புத்தகங்கள் நம் வாழ்வையே புரட்டிப்போடும் சக்தி படைத்தவை. அப்படி, நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில புத்தகங்களை கமல்ஹாசன் பரிந்துரைக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?

Books Recommended By Actor Kamal Haasan : ஒவ்வொரு நல்ல புத்தகமும் ஒவ்வொரு பொக்கிஷத்திற்கு சமம் என பிறர் கூற கேட்டிருப்போம். அதை, உளமார நம்பும் மனிதர், கமல்ஹாசன். தான் புத்தகம் படிப்பதோடு மட்டுமன்றி பிறரையும் புத்தகம் படிக்கச்சொல்லி கூறுபவர் இவர். பிக்பாஸில் தொகுப்பாளராக இருந்த போது, ஒவ்வொரு வார இறுதி எபிசோடிலும் தான் அப்போது படித்துக்கொண்டிருக்கும் அல்லது படித்த புத்தகத்தை பரிந்துரைப்பார். அந்த வகையில், அவர் சில இடங்களில் பரிந்துரைத்த புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

1 /7

திருக்குறளுக்கு முன்னாள் முதலமைச்சரும் எழுத்தாளருமான கலைஞர் உரை எழுதியிருக்கிறார். இதை கண்டிப்பாக படிக்க வலியுறுத்துகிறார் கமல். 

2 /7

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் புத்தகத்தை ஆர்.பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தையும் படிக்க சொல்கிறார் கமல்ஹாசன். 

3 /7

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1 மற்றும் பாகம் 2 என இரு புத்தகங்கள் இருக்கின்றன. இதையும் படிக்க வேண்டும் என்கிறார் கமல். 

4 /7

சிதம்பர நினைவுகள் புத்தகத்தை கே.வி.ஷைலஜா எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், தமிழ் மக்களின் வரலாற்றை எடுத்தியம்புவதாக இருப்பதாக கூறப்படுகிறது. 

5 /7

உலகளவில் பிரபலமான ஜப்பானிய புத்தகம், இக்கிகை. இந்த புத்தகம், வாழ்வை கற்றுக்கொடுப்பதோடு ஆயுளை அதிகரிக்கவும் கற்றுத்தருகிறது. 

6 /7

காலா பாணி நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என கூறப்படுகிறது. இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்குமாறு ஒரு முறை பிக்பாஸில் கமல் பரிந்துரைத்தார். 

7 /7

அம்பேத்கர் இன்றும் என்றும் புத்தகம், அவரது கொள்கைகளை பெரிதளவில் எடுத்துச்சொல்லும் புத்தகமாக இருக்கிறது. இதனை படிக்கச்சொல்கிறார் கமல்.