சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை: 1 மாதம் 3 ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம்!!

Shukra Gochar in Cancer: வேத ஜோதிடத்தின்படி இன்று, அதாவது மே 30, 2023 அன்று, சுக்கிரன் கடக ராசியில் நுழைந்தார். ஆடம்பரம், செல்வம், செழிப்பு, சுகபோகம் ஆகியவற்றை தரும் கிரகமான சுக்கிரன் ஜூலை 1 வரை கடக ராசியில் இருப்பார்.

மறுபுறம், நிலம், தைரியம், வீரம், விவேகம், கோபம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் கிரகம் ஏற்கனவே கடகத்தில் உள்ளது. செவ்வாய் ஜூலை 7ம் தேதி வரை கடக ராசியில் இருப்பார். இவ்விரு கிரகங்களின் ஒன்றாக கடக ராசியில் இருப்பதால், அந்த ரசையில் செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. 

1 /6

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை: செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் பல ஆக்கப்பூர்வமான, நேர்மறையான அம்சங்களின் காரணிகளாக கருதப்படுகின்றன. ஆகையால் இவற்றின் சேர்க்கை பல அனுகூலமாக பலன்களை ஏற்படுத்தும்.  

2 /6

ராசிகளில் தாக்கம்: சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால் ஏற்படும் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், இந்த சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /6

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு புதிய வீடு, வாகனம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார ரீதியில் ஆதாயம் உண்டாகும், மேலும் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். தாயின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

4 /6

கடகம்: செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை கடகத்தில்தான் உருவாகிறது. இது கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். உங்கள் ஆளுமையின் கவர்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களுடன் உறவுகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் நல்லுறவு உருவாகும். பண வரவு சாதகமாக இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். கோபத்தைத் தவிர்க்கவும்.  

5 /6

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சுபமாக இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். புதிய வேலைகளைச் செய்யத் திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும். படிப்புக்காக வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.