ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த தோல்வி அவர்களின் பிளேஆஃப் கனவை சிக்கலாக்கி உள்ளது.
இன்னும் லீக் கட்டத்தில் அவர்களுக்கு மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளது. லக்னோ தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதுவரை, 11 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள லக்னோ 16 புள்ளிகளைப் பெற அடுத்த மூன்று ஆட்டங்களில் குறைந்தது இரண்டில் வெற்றி பெற வேண்டும். மேலும் அவர்களின் நிகர ரன்-ரேட்டையும் நன்கு வைத்திருக்க வேண்டும்.
மறுபுறம் சென்னை அணி தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.
இன்னும் சென்னை அணிக்கு 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளன.