Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டைட்டில் லீக்! என்ன தெரியுமா?

Mookuthi Amman 2 Movie Title : ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த 2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. 

Mookuthi Amman 2 Movie Title : கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோக்களுள் ஒருவராக இருப்பவர், ஆர்.ஜே.பாலாஜி. இவர், நடிப்பிலும் இயக்கத்திலும் 2020ஆம் ஆண்டு வெளியான படம், மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து ஊர்வசி, டி.எஸ்.பி.கே மௌலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் அம்மனாக நடிப்பது நயன்தாரா இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

1 /8

2020ஆம் ஆண்டு வெளியான படங்களில் கவனிக்கத்தக்க படமாக இருந்தது, மூக்குத்தி அம்மன். கொரோனா காலம் என்பதால் இப்படம் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார். 

2 /8

மூக்குத்தி அம்மன் படத்தில், ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்க, அவருடன் இணைந்து ஊர்வசி, மௌலி, இந்துஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமூகத்திற்கு உதவும் கதையுடன் எடுக்கப்பட்ட இந்த படம், மக்களை கவர்ந்தது. இதில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். 

3 /8

மூக்குத்தி அம்மன் படம் பெரிய வெற்றி பெற ஒரு காரணமாக இருந்தார் நயன்தாரா. இவர், இப்படம் முழுக்க டிராவல் ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கேமியோ ரோலில்தான் நடித்திருந்தார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும், படம் நன்றாக இருந்ததால் அதைப்பற்றி யாரும் பெரிய குறையாக பேசவில்லை. 

4 /8

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு ரன் பேபி வீட்ல விஷேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்துவிட்ட அவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வேலைகளில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

5 /8

ஆர்.ஜே.பாலாஜி ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சிங்கப்பூர் சலூன் ரிலீஸிற்கு பிறகு பிரேக் எடுத்திருந்த இவர், அதற்கு முன்னால் இருந்தே மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதை எழுதும் பணிகளில் இறங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

6 /8

இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் முடிவு பெற்று விட்டதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

7 /8

முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா இரண்டாம் பாகத்தில் அம்மனாக வரவில்லை எனக்கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறு ஒரு பெரிய ஹீரோயின் நடிக்கிறார். 

8 /8

அந்த நடிகை வேறு யாருமில்லை, த்ரிஷாதான். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு ‘மாசாணி அம்மன்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம். இது, முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்றும், வேறு பாணியில் இக்கதை அமையப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.