K Pop Singer Park Bo Ram Death : 30 வயது கே-பாப் பாடகியான பார்க் போ ராம், பார்டிக்கு சென்ற இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி, இந்தியாவில் இருக்கும் கொரிய பாடல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
K Pop Singer Park Bo Ram Death : கடந்த சில வருடங்களாகவே, இளவயது மரணங்கள் குறித்த செய்தி, பார்போரின் நெஞ்சங்களை பதற வைத்து வருகிறது. இந்தியாவை பொருத்த வரை, கொரிய மொழி திரைப்படங்களுக்கும் கொரிய மொழி பாடல்கள் மற்றும் தொடர்களுக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது, 30 வயது இளம் பாப் பாடகி பார்க் போ ராம் திடீரென உயிரிழந்திருக்கும் விவகாரம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கொரிய பாப் பாடகர்களுள் உலகளவில் பிரபலமானவராக இருப்பவர், பார்க் போ ராம். 30 வயதாகும் இவர் தற்போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். இந்த இறப்பிற்கு பின்னாள் இருக்கும் காரணம் என்ன?
பார்க் போ ராம், நேற்று முன்தினம் ஒரு பார்டீயில் கலந்து கொண்டுள்ளார். இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு (Private Party) என்பதால் தனது வெகு சில நண்பர்களுடன் மட்டும் சென்றிருக்கிறார்.
போலீஸார் கூறியுள்ள தகவல்களின்படி, நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த இவர், இரவு 9:55 மணி அளவில் கழிப்பறைக்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு இவர் வெளியில் வரவே இல்லை என்பதால், இவருடன் இருந்த நண்பர்கள் கவலையடைந்துள்ளனர்.
அவர்கள் கழிவறைக்கு சென்று பார்த்த போது, மயக்கமடைந்த சிங்க் அருகே சாய்ந்த நிலையில் இருந்திருக்கிறார். உடனே மருத்துவ உதவிகு அழைத்த அவரது நண்பர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை (CPR) அளித்திருக்கின்றனர்.
மருத்துவ குழு அங்கு விரைந்து வந்து பார்க் போ ராமை பரிசோதித்து, பின்னர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர், அவரை முழுமையாக பரிசோதித்த மருத்துவர்கள் பார்க் போ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
மிக இளம் வயதில், பார்டிக்கு சென்ற இடத்தில் மர்மமான முறையில் பிரபலமான பாடகி ஒருவர் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளாக்கியுள்ளது. இவர், பாடகி என்பதை தாண்டி பல கொரியன் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.