வீட்டின் மகிழ்ச்சி மற்றும் வளம் என்றென்றும் இருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போதும். தேங்காய், மயில் இறகு மற்றும் ஒரு ஜோடி பறவைகள் உட்பட பல பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் என்ன பயன் என அறிந்து கொள்ளலாம்.
வீட்டின் மகிழ்ச்சி மற்றும் வளம் என்றென்றும் இருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போது.. தேங்காய், மயில் இறகு மற்றும் ஒரு ஜோடி பறவைகள் உட்பட பல பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் என்ன பயன் என அறிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில், ஜோடி பறவை, தேங்காய் மற்றும் மயில் இறகுகள் ஆகியவை வீட்டில் செழிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களை வைத்து வீட்டை அலங்காரத்தால், வீட்டில், செழிப்புக்கும் அமைதிக்கும் குறைவே இருக்காது. வாஸ்து படி எந்தெந்த பொருட்கள் வீட்டில் எந்த விதமான பலனை கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்க்திரப்படி, மணி ப்ளாண்ட் என்னும் செடியை வைப்பது வீட்டிற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இந்த மணி ப்ளாண்டை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பதோடு, குடும்பத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், மயில் இறகுகள் வீட்டிற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. மயில் இறகுகளை வீட்டில் வைத்திருப்பது பல சிக்கல்களை தீர்க்கும்.
இந்து குடும்பங்களில், பூஜை, சுப காரியங்களில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நேர்முறை ஆற்றலை பரப்பும் என்பதால் தான் சுப காரியங்களில் இது நிச்சயமாக பயன்படுத்தப்படுகிறது.
பறவைகள் என்பது பண்டைய காலங்களிலிருந்து இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அழகான பறவைகளின் படங்கள் அல்லது உருவங்களை வீட்டில் வைத்திருந்தால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் அன்பும் அமைதியும் குறைவில்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது . வாத்துகள், கிளிகள், மயில்கள் போன்ற ஒரு ஜோடி பறவைகளின் உருவத்தை அல்லது படத்தை வீட்டில் வைப்பது வீட்டில் உள்ள உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பை அதிகரிக்கும். அத்தகைய ஜோடி பறவைகளை புதிதாக மணமான தம்பதிகளின் படுக்கையறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.