இளநரை என்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனை. இதற்கு தீர்வாக, சந்தையில் பல பொருட்களை வாங்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானாவை முடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அதோடு பக்க விளைவுகளும் அதிகம் உண்டு.
உடலுக்கு தீங்கு விளைவிக்காத அல்லது முடியின் இயல்பான தன்மையை அழிக்காத ரசாயன பொருட்களுக்கு மாற்றாக இயற்கை வைத்தியம் சிறந்த பலனை தருவதோடு, முடியையும் பாதுகாக்கும். இள நரையைத் தடுக்க உதவும் ஐந்து இயற்கை வைத்தியங்கள் இவை.
பிருங்கராஜ் இளநரையை தடுக்கிறது மற்றும் முடிக்கு இயற்கையான கருப்பு நிறத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணெயில் பிருங்கராஜ் இலையின் சாற்றை கலந்து சூடாக்கி, தலைமுடியில் தடவி மசாஜ் செய்யவும். ஆயுர்வேத மருந்துகள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.
கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் சிறந்தது. நெல்லிக்காயில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் பொடியும் கிடைக்கும். நெல்லிக்காய் எண்ணெயை தலையில் தடவினால், இளநரையைத் தடுக்கலாம்.
பிளாக் டீ, முடி நிறம், பிரகாசம் மற்றும் மென்மை அதிகரிக்கிறது. மூன்று முதல் ஐந்து டீ பேக்குகளை இரண்டு கப் கொதிக்கும் நீரில் நனைத்து, ஆறவைத்து, பின் கூந்தலில் தடவி மசாஜ் செய்யலாம். இதை உங்கள் தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
கூந்தல் நிறத்தை புதுப்பிக்கவும், மயிர்க்கால்களை ஆரோக்கியமாகவும் மாற்ற பீர்க்கங்காய் சிறந்தது. தலைமுடியில் பீர்க்கங்காய் போட்டு காய்ச்சிய எண்ணெயை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், இளநரையைத் தடுக்கலாம்.
கறிவேப்பிலை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. கறிவேப்பிலையுடன் எண்ணெய் கலந்து தலைமுடியில் தடவினால் இளநரையைத் தடுக்கலாம். கறிவேப்பிலை தலைமுடிக்கு கருப்பு நிறத்தை கொடுக்கவும், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.