Post Office வழங்கும் இந்த சேமிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகலாம்..!!!

தபால் நிலையங்கள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்துள்ளன. இங்கே அனைத்து வயதினருக்கும் ஏற்ற திட்டங்கள் உள்ளன. கொரோனா நெருக்கடியில் நீங்கள் பணத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்கும் சிறந்த திட்டத்தில் முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக முடியும். தபால் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், முதலீட்டாளர்கள் 7.4 சதவீத வட்டி பெறுகின்றனர். வெறும் 5 ஆண்டுகளில் 14 லட்சம் ரூபாய் எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme -SCSS): தபால் நிலையங்கள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்துள்ளன. இங்கே அனைத்து வயதினருக்கும் ஏற்ற திட்டங்கள் உள்ளன. கொரோனா நெருக்கடியில் நீங்கள் பணத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்கும் சிறந்த திட்டத்தில் முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக முடியும். தபால் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், முதலீட்டாளர்கள் 7.4 சதவீத வட்டி பெறுகின்றனர். வெறும் 5 ஆண்டுகளில் 14 லட்சம் ரூபாய் எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

1 /6

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க உங்கள் வயது வரம்பு 60 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.  SCSS திட்டத்தின் கீழ் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்கைத் திறக்க முடியும். இது தவிர, வி.ஆர்.எஸ் எடுத்தவர்கள், அதாவது தன்னார்வ அட்டிபடையில் ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கையும் திறக்கலாம்.

2 /6

மூத்த குடிமக்கள் திட்டத்தில் மொத்தமாக ரூ .10 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 7.4 சதவீத கூட்டு வட்டி விகிதத்தில், முதிர்ச்சி காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மொத்த தொகை ரூ .14,28,964 கிடைக்கும், அதாவது ரூ .14 லட்சத்துக்கு மேல். இதில், நீங்கள் 4,28,964 ரூபாயை வட்டியாகப் பெறுகிறீர்கள்.

3 /6

இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய். அதிக பட்சம் 15 லட்சம் ரூபாய். இது தவிர, உங்கள் கணக்கு திறக்கும் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் பணம் செலுத்தி கணக்கைத் திறக்கலாம். அதே நேரத்தில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு கணக்கைத் திறக்க, நீங்கள் ஒரு காசோலையை கொடுக்க வேண்டும்.

4 /6

எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால் முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த கால வரம்பை மேலும் நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தை முதிர்ச்சியடைந்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் என இந்தியா போஸ்ட் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. முதிர்வு காலத்தை நீட்டிக்க, நீங்கள் தபால் நிலையத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

5 /6

வரி பற்றி பேசுகையில், உங்கள் வட்டி தொகை எஸ்.சி.எஸ்.எஸ் இன் கீழ் ஆண்டுதோறும் ரூ .10,000 ஐ தாண்டினால், உங்களுக்கு டி.டி.எஸ் கழிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

6 /6

எஸ்.சி.எஸ்.எஸ் இன் கீழ், முதலீட்டை தொடங்கும் நபர், தனிப்பட்ட முறையிலோ அல்லது அவரது மனைவி / கணவருடன் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியும். ஆனால் அனைவரையும் சேர்த்து, அதிகபட்ச முதலீட்டு வரம்பு  15 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது.