கடக ராசியின் வெளிவராத ரகசியம்.. விட்டுக்கொடுக்கும் குணமுடன் இருப்பார்களாம்

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள், நற்குணங்களை பெற்றிருப்பர். குறிப்பாக 12 ராசிகளில் கடக ராசி நல்ல ஆசானாகவும், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். எனவே கடக ராசியின் குணாதிசயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

கடக ராசியின் அதிபதி சந்திரன். இதனால் தான் கடக ராசிக்காரர்கள் எப்போதுமே சந்திரனைப் போல் எப்போதுமே ஜொலித்துக் கொண்டே இருப்பார்களாம். கடக ராசியில் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் அடங்கியது. இப்போது கடக ராசியின் குணாதிசயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

 

1 /8

இந்த ராசியை கொண்ட ஆண்கள் தங்கள் பாசமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசியில் பிறந்த  ஆண்கள் தனகளின் மனைவியின் கைகளைப் பிடிப்பது மூலம் அக்கறையை.  

2 /8

கடக ராசி நீர் ராசிகள் ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள். சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.  

3 /8

கடக ராசிக்காரர்கள் ரசனைக்காரர்களாக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ நினைப்பார்கள். 12 ராசிகளில் கடக ராசிக்காரர்கள் மிக மிக உணர்ச்சிகரமான ராசி ஆகும்.  

4 /8

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு மற்ற ராசிகளை விட நினைவுத் திறன் அதிகமாக இருக்கும். ஆண்டாண்டு காலமாக நடந்திருக்கும் முக்கியமான நிகழ்வுகளை இந்த ராசியினர் மறக்கவே மாட்டார்கள்.  

5 /8

கடக ராசிக்காரர்கள் அன்பு செலுத்துவதிலும், கருணை காட்டுபவராகவும் இருப்பார்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள்.  

6 /8

எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் கடக ராசிக்காரர்களால் ஜொலிக்க முடியும்.   

7 /8

கடக ராசிக்காரர்கள் தங்களின் உடன் பிறந்தவர்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பார்கள். குறிப்பாக உடன் பிறந்தவர்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்கு போராடுவார்கள். ஓட்டுமொத்தமாக கடக ராசிக்காரர்கள் தங்கள் உடன் பிறந்தவர்களை பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொள்வார்கள்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.