குரு பெயர்ச்சி 2024... கெடுபலன்களும் பரிகாரங்களும்!

குரு பெயர்ச்சி 2024: குரு பகவான் மே 1, 2024 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் சஞ்சாரத்தால், 2024-ம் ஆண்டு சில ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

கிரக பெயர்ச்சிகள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் சனி, குரு போன்ற முக்கிய கிரகங்களின்  பெயர்ச்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2024 குரு பெயர்ச்சியினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.  இந்த  ராசிகள் எவை என தெரிந்து கொள்வோம்...!

1 /6

குரு பெயர்ச்சி இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் சில படிப்பினைகளை தருவார். 2024ல் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 2:29 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறுகிறார். 2024ல் ஏற்படும் குருவின் சஞ்சாரம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.  

2 /6

ரிஷபம் - குரு பெயர்ச்சி 2024 இந்த ராசிக்காரர்களுக்கு பல ஏற்ற தாழ்வுகளைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையலாம்.  குருவின் இந்த சஞ்சாரம் காரணமாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையில் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். தொழிலிலும் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

3 /6

கன்னி - குரு பெயர்ச்சி 2024 பல விஷயங்களில் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த சுப காரியங்களையும் செய்யக்கூடாது. கௌரவம் பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கன்னி ராசிக்காரர்கள் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

4 /6

துலாம் - குரு பகவான் துலாம் ராசியின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களுடனான உங்கள் சச்சரவுகள் அதிகரிக்கலாம். ராசிக்காரர்களுக்கு கடன் சுமை கூடும். நிதி ரீதியாக, இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பலவீனமாக இருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும்.

5 /6

குரு பெயர்ச்சியினால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது. வியாழனன்று குரு பகவானுக்குச் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி வழிபடுதல் நன்மை தரும்.

6 /6

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.