சூரியன் உதிக்கவில்லை என்றால் என்ன; ‘செயற்கை சூரியனை’ தயாரிப்போம்

செயற்கை சூரியன்: மனித வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் மிகவும் முக்கியமானது. ஆனால் சூரியனின் கதிர்களைக் காண மக்கள் ஏங்கும் சில பகுதிகள் இந்த பூமியில் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உலகில் சூரிய ஒளியை மக்கள் பெறாத கிராமத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால், இவர்கள் செயற்கை சூரியனை உருவாக்கி சாதித்துள்ளனர்.

1 /4

இத்தாலியின் இந்த கிராமத்தின் பெயர் Vigallena. உயரமான மலைகள் காரணமாக, மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு சூரிய ஒளி செல்வதில்லை. இந்த கிராமம் மிலனுக்கு வடக்கே 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மக்கள் தொகை 200. நவம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சூரியன் உதிப்பதில்லை. மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து, கிராமத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரும், பொறியாளரும் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். பொறியாளர் கிராமத்தின் மேயரின் உதவியுடன் விகல்லெனா கிராமத்திற்கு செயற்கை சூரியனை உருவாக்கினார்.

2 /4

மூன்று மாதங்களாக இந்த கிராமம் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வை கிராமத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியாளர் கண்டுபிடித்து செயற்கை சூரியனை உருவாக்கினார். 2006 ஆம் ஆண்டில், பொறியாளர், கிராமத்தின் மேயரின் உதவியுடன், மலைகளின் உச்சியில் 40 சதுர கிலோமீட்டர் கண்ணாடியை நிறுவினார். கண்ணாடி மீது விழும் சூரிய ஒளி பிரதிபலித்து நேரடியாக கிராமத்தின் மீது விழும் வகையில் கண்ணாடி வைக்கப்பட்டது.

3 /4

மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த கண்ணாடி கிராமத்திற்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரம்  ஒளியை கொடுக்கிறது. கண்ணாடியின் எடை சுமார் 1.1 டன். அதன் விலை 1 லட்சம் யூரோக்கள்.  மலையில் நிறுவப்பட்ட கண்ணாடிகள் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கை சூரியனை உருவாக்கிய பிறகு, விக்லேனா கிராமம்  உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

4 /4

Vigallena கிராமத்தின் மேயர் Pierfranco Madali, இது குறித்து கூறுகையில் இந்த செயற்கை சூரியன் யோசனை கூறியது ஒரு விஞ்ஞானி அல்ல, ஒரு சாதாரண மனிதன் தான் என்று கூறினார். குளிர்காலத்தில் சூரிய ஒளி இல்லாததால் குளிர் மற்றும் இருள் காரணமாக நகரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் ரூ.87 லட்சம் செலவில் செயற்கை சூரியன் தயார் செய்யப்பட்டது. இப்போது குளிர்காலத்திலும் கிராமத்திற்கு சூரிய ஒளி கிடைக்கிறது.