சிலருக்கு வயதாவற்கு முன்பே முகம் பொலிவிழந்து காணப்படும். இதை சரி செய்ய மருத்துவர் வழங்கிய டிப்ஸ்.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த கேரட், பப்பாளி, கொய்யாப்பழம் உள்ளிட்டவை சாப்பிட்டால் முகம் பொலிவாக இருக்கும்.
இரவு உறங்குவதற்கு முன் நல்லெண்ணெய்யில் மஞ்சட்டி, அதிமதுரம் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தி வருவது சிறந்தது.
முகத்தைப் பொலிவாக வைத்திருக்க வேப்பங்கொழுந்து, பாசி பயிர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்களைக் காய வைத்து அரைத்து அந்த பொடியை பயன்படுத்தலாம்.
முகம் பொலிவாக இருக்க Cosmetic, Facewash உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டாம், இவற்றை பயன்படுத்துவதால் சருமம் வறண்டு விடும்.