ஐபிஎல் 2022: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ஐந்து இந்திய வீரர்கள்!

இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேரியரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறார். விராட் ஐபிஎல் 2022-ன் ஒன்பது ஆட்டங்களில் வெறும் 128 ரன்களை மட்டுமே அடித்து உள்ளார்.  மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆனார். இந்த ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு கேப் பந்தயத்தில் விராட் கோலியை விட சில இந்திய வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். 

 

1 /5

திலக் வர்மா இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார்.  19 வயதான அவர் தனது முதல் ஐபிஎல் சீசனில் விளையாடுகிறார். இதுவரை,எட்டு ஐபிஎல் ஆட்டங்களில் 45 என்ற அசாதாரண சராசரியுடன் 272 ரன்களை அடித்துள்ளார். அவர் ஆரஞ்சு கேப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.  

2 /5

போட்டியின் சூழ்நிலைக்கேற்ப ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட் செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது, இதுவரை 9 போட்டிகளில் 195 ரன்கள் எடுத்துள்ளார். சீசனில் சராசரியாக 32.50 என்ற ரன் ரேட்டில் உள்ளார்.  

3 /5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பேட்டிங் செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தது அணி நிர்வாகம். அவர் இதுவரை எட்டு ஆட்டங்களில் 131.33 என்ற அதிர்ச்சியூட்டும் ஸ்டிரைக் ரேட்டுடன் 285 ரன்களை எடுத்துள்ளார்.    

4 /5

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட வீரர்களில் ராகுல் திரிபாதியும் ஒருவர். ஆச்சரியம் என்னவென்றால், ராகுல் இன்னும் சர்வதேச அளவில் அறிமுகமாகவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3வது இடத்தில் பேட்டிங் செய்த அவர், இந்த சீசனில் 8 ஆட்டங்களில் 228 ரன்கள் எடுத்துள்ளார்.  

5 /5

ராகுல் தெவாடியா குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.  150 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சில ஆட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.  கடைசி ஓவரில் எத்தனை ரன்கள் இருந்தாலும், ராகுல் தெவாடியா இருந்தால் வெற்றி என்ற நம்பிக்கையில் தற்போது குஜராத் அணி உள்ளது.