35 ரன்களில் ரோஹித் ஷர்மாவை ஷ்ரேயஸ் அவுட்டாக்கியது மும்பை அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. (Photo-BCCI/IPL)
இந்த போட்டியில் இஷான் சோபிக்கவில்லை ஷ்ரேயஸ் கோபால், இந்த வீரர் தனது கணக்கை தொடங்கவே விடவில்லை. (Photo-BCCI/IPL)
மும்பை இண்டியன்ஸ் அணியின் சூர்யகுமார் புயலென மட்டை வீசினார். 47 பந்துகளை எதிர்கொண்டு, 11 பவுண்ட்ரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என விளாசித் தள்ளி, 79* ரன்கள் எடுத்தார். (Photo-BCCI/IPL)
ஹார்திக் பாண்ட்யா 19 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 193/4 என்ற இலக்கை எட்டியது. (Photo-BCCI/IPL)
ராஜஸ்தான் அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விரைவில் பெவிலியனுக்கு திரும்பினார்கள். ஆனால் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். (Photo-BCCI/IPL)
கீரோன் பொல்லார்ட் ஜோஸ் பட்லரின் கேட்சைப் பிடித்து, ஒரு சிறந்த பீல்டிங் அனுபவத்தை வழங்கினார். (Photo-BCCI/IPL)
ராஜஸ்தானின் மஹிபால் லோமர் 11 ரன்கள் எடுத்தபோது, மும்பை அணியின் பீல்டர் சுப்த் ராய் அற்புதமான கேட்சைப் பிடித்து களத்தில் தனது இருப்பைப் பதிவு செய்தார். (Photo-BCCI/IPL)
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட டாம் குர்ரன், வெறும் 15 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். (Photo-BCCI/IPL)
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. (Photo-BCCI/IPL)
ராஜஸ்தான் சார்பாக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான கார்த்திக் தியாகி, மும்பை இந்தியன்ஸுக்கு முதல் அடியைக் கொடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிக்கோக்கை 23 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். (Photo-BCCI/IPL)
மும்பை இண்டியன்ஸின் மற்றுமொரு வெற்றி இது. ராஜஸ்தான் அணியை 18.1 ஓவரில் 136 ரன்களில் முடக்கிய மும்பை அணி, 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது... (Photo-BCCI/IPL)
வெற்றிக் கதாநாயகன் சூர்யகுமார் யாதவ் என்றே சொல்லலாம். அபாரமான அவரது ஆட்டம் மேன் ஆஃப் த மேட்ச் என்ற விருதை பெற்றுத் தந்தது. (Photo-BCCI/IPL)