Aliens: வேற்றுகிரகவாசிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவையாகவும் உள்ளன. ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.

 

1 /5

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் நம்முடைய பூமியை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வருகிறார்கள் என்ற நம்பிக்கை  நிலவுகிறது. வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2 /5

அமெரிக்காவில் ராணுவ விமானிகள்  UFO எனப்படும் விண்ணில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை பார்த்ததாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.

3 /5

2004ஆம் ஆண்டு முதல் 144 முறை, UFO எனப்படும் விண்ணில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை பார்த்ததாக  அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

4 /5

வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால் அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

5 /5

வேற்று கிரக வாசிகள் குறித்து நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.