இந்திய அணி மகத்தான சாதனை: ஆஸ்திரேலியா கூட ரெண்டாவது தான்..!

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது.

 

1 /7

ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.  

2 /7

ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரோகித் சர்மா, அஸ்வின் என எல்லோரும் ஒருங்கிணைந்து விளையாடியதால் இப்போட்டியில் இந்திய அணி வெல்ல முடிந்தது. ஆட்டநாயகனாக ராஞ்சியை சேர்ந்த துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்ததுடன் விக்கெட் கீப்பிலும் சிறப்பாக செயல்பட்டார்.   

3 /7

இரண்டாவது இன்னிங்ஸிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்த சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறது.   

4 /7

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக 17 முறை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை.   

5 /7

இந்த சாதனையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இரு முறை தலா 10 தொடர்களை அவர்களது சொந்த மண்ணில் வென்றிருக்கிறது. ஆனால் இந்திய அணியைப் போல் அவர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை.   

6 /7

இதற்கு அடுத்த அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக 8 முறை அவர்களது மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. நியூசிலாந்து அணியும் முறை தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கிறார்கள். 

7 /7

ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்த சாதனையில் யாருமே தொட முடியாத உட்சத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம்.