1-1-1-1 விதி... கணவன், மனைவி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் - உறவில் சண்டையே வராது!

Relationship Tips In Tamil: திருமண உறவில் சண்டை வராமல் இருக்க கணவன், மனைவி ஆகிய இருவரும் இந்த 1-1-1-1 விதியை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

திருமண உறவில் சண்டை வருவது இயல்புதான். ஒவ்வொரு தம்பதியும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். எனவே, பொதுவான தீர்வுகள் என எதுவும் இல்லை. இருப்பினும், சில விஷயங்களை அடிப்படையாக செய்தாலே தம்பதிகளுக்குள் நிச்சயம் பிரச்னை வராமல் இருக்கும்.

 
 
1 /8

திருமண உறவில் ஆண் - பெண் இடையே பிரச்னை வருவது என்பது வாடிக்கையானதுதான். உங்கள் தாத்தா - பாட்டி, அப்பா - அம்மா யாரிடம் கேட்டாலும் சண்டைப் போடாமல் அவர்கள் வாழ்க்கையை நடத்தியிருக்க மாட்டார்கள்.   

2 /8

இருப்பினும், அவர்கள் நீண்ட காலத்திற்கு திருமண உறவில் வெற்றிகரமாக இருப்பதற்கு அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான். அந்த புரிதலை அதிகரிக்க இளம் தம்பதிகள் தங்களின் மூத்தவர்களிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   

3 /8

1-1-1-1 என்ற விதியை இளம் கணவன், மனைவி தெரிந்திருக்க வேண்டும். இதன்மூலம், தங்களுக்குள் தீவிரமான பிரச்னைகளோ, சண்டையோ வராமல் அவர்கள் தடுக்கலாம். இந்த எளிய விதி உங்களின் திருமண உறவை பலமாக்குவதில் முக்கிய பங்கும் வகிக்கும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.   

4 /8

1-ஒரு வாரம் விடுமுறை: அதாவது ஆண்டுக்கு ஒரு வாரம் உங்களின் அனைத்து விஷயங்களையும் விட்டு, பணிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு கணவன் - மனைவி மட்டும் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும். அதில் குழந்தைகளோ, மற்ற குடும்ப உறுப்பினர்களோ இல்லாமல் பார்த்துக்கொள்வது கூடுதல் நல்லது. இது கணவன் - மனைவிக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும்.   

5 /8

1-டேட்டிங்: திருமணமான பின்னரும் சரி வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ இருவரும் சேர்ந்து வெளியில் செல்ல வேண்டும். திரைப்படம் பார்ப்பதற்கு, புதுப்புது உணவுகளை தேடி சாப்பிடுவதற்கு என புதுப்புது இடங்களுக்கு தனியாக சென்று வருவது திருமண உறவில் புரிதலை அதிகரிக்கும்.   

6 /8

1-தினமும் அரைமணி நேரம்: தினமும் ஒருமுறை 30 நிமிடங்கள் தம்பதிகள் தங்களுக்குள் நேரம் செலவழித்துக் கொள்ள வேண்டும். தினமும் அரைமணி நேரம் தனியாக பேசலாம், அரைமணி நேரம் நடக்கலாம், உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த விஷயங்கள் கணவன் - மனைவி உறவை பலமாக்கும்.   

7 /8

1-வாரம் ஒரு உடலுறவு: கணவன் - மனைவிக்கு இடையிலான பாலியல் வாழ்வும் ரொம்பவே முக்கியம். எனவே, வாரத்தில் ஒருமுறையாவது உடலுறவு வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். திருப்தியான பாலியல் வாழ்வு நிம்மதியான குடும்ப வாழ்வுக்கு இட்டுச்செல்லும். இதனால், இருவருக்கு இடையிலான நெருக்கம் குறையவே குறையாது.   

8 /8

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை