இனி உட்காந்த இடத்தில் இருந்தே PF கணக்கில் நாமினியை Online மூலம் அப்டேட் செயலாம்!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி நாமினியை அப்டேட் செய்வது? இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று இது. ஏனெனில் பிஎஃப் கணக்கினை பொறுத்த வரையில், அதில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமெனில், இதற்காக பிஎஃப் அலுவலகம் சென்ற காலம் போய், இன்று அனைத்தும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளலாம்.

  • Feb 14, 2021, 10:53 AM IST

அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல் ஆன்லைனிலேயே, இது போன்ற விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு மத்தியில், அரசு ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் சேவைகளை புகுத்தி வருகின்றது. குறிப்பாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும் பல டிஜிட்டல் சேவைகளை புகுத்தியுள்ளது.

1 /7

அந்த வகையில் இன்று எப்படி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில், எப்படி நாமினியை அப்டேட் செய்வது? என்னென்ன ஆவணங்கள் தேவை என பார்க்கலாம். ஆதார் நம்பரை உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த விதிகளை பின்பற்றி மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் உங்களது இபிஎஃப் கணக்கினை லாகின் செய்து கொள்ள வேண்டும்.

2 /7

LOG IN செய்த பிறகு அங்கு KYC என்ற ஆப்சனின் கீழ் உள்ள manage என்பதை கிளிக் செய்யவும். ஆனால் இந்த போர்ட்டலை உபயோகப்படுத்தும் முன்பு UAN நம்பரை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இங்கு நீங்கள் உங்களது போட்டோவினையும் அப்லோடு செய்ய வேண்டியிருக்கும். இதற்காக உங்களது PROFILE என்ற ஆப்சனை கிளிக் செய்து, அதில் view டேப்பினை கிளிக் செய்து உங்களது போட்டோவினை அப்லோட் செய்து கொள்ளுங்கள்.

3 /7

இவ்வாறு பதிவு செய்யப்படும் போட்டோ டிஜிட்டல் கேமிராவில் எடுத்திருக்க வேண்டும். இந்த போட்டோ 3.5CM * 4.5 CM என்ற அளவில் இருக்க வேண்டும். இதில் இரண்டு காதுகளும் கவனிக்கதக்கவை. உங்களது போட்டோவில் 80% முகத்தை தெளிவாகக் காண வேண்டும், உங்களது போட்டோ JPEG அல்லது JPG அல்லது PNG பார்மேட்டில் இருக்க வேண்டும். உங்கள் போட்டோவினை பதிவு செய்த பிறகு, உங்களது முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும்.

4 /7

அதெல்லாம் சரி நாமினியை எப்படி அப்டேட் செய்வது? இதற்காக https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் உங்களது லாகின் ஐடி பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் மேனேஜ் (Manage) என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது E - nomination என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை கிளிக் செய்த பிறகு, அது மற்றொரு புதிய பக்கத்தில் லாகின் ஆகும்.

5 /7

புதிய பக்கத்தில் Having Family என்ற pop up வரும். அதில் yes or no என்று கொடுக்க வேண்டும். Yes கொடுத்த பிறகு தேவையான விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும். இதற்காக நாமினியின் ஆதார், பெயர், பிறந்த தேதி, ஆணா அல்லது பெண்னா, நாமினி உங்களுகு என்ன உறவு, முகவரி என்ன, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்காக போட்டோ (100 KB அளவில்) கொடுக்க வேண்டியிருக்கும்.

6 /7

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிக்களை சேர்க்க விரும்பினால், add row என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேற்கண்ட விவரங்களை கொடுத்த பிறகு SAVE செய்து கொள்ளவும். நீங்கள் குறிப்பிட்ட ஒருத்தருக்கு உங்களது பிஎஃப் விவரங்களையும், ஒட்டுமொத்த பங்கினையும் கொடுக்க விரும்பினால் அதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

7 /7

நீங்கள் நாமினி விவரங்களைக் கொடுத்து Save செய்திருந்தால், அதனை Manageல் சென்று பார்க்கும்போது பெண்டிங் லிஸ்டில் காண்பிக்கும். இந்த செயல்முறையை முடிக்க வேண்டும் எனில் உங்களது e - sign தேவைப்படும். ஆக அதனையும் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த விவரங்களை அப்டேட் செய்ய உங்களிடம் UAN எண், ஆதார் எண் உள்ளிட்ட பல விவரங்கள் தேவை.