Parenting Tips: உங்கள் குழந்தைகளை அறிவாளியாக மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!

Parenting Tips Tamil: குழந்தைகளை வளர்ப்பது கடினமான காரியம் என்பது அனைவருக்கும் தெரியும், அதிலும் அறிவாளியாக குழந்தைகளை மாற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா? அதற்கான டிப்ஸை இங்கு பார்க்கலாம். 

Parenting Tips Tamil: குழந்தைகளை வளர்ப்பது, எந்த பெற்றோருக்கும் சாதாரண காரியம் அல்ல. பல பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகள் அறிவாளியாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான வளர்ப்பு முறை என்னவென்று தெரியாமல் தவிப்பர். அவர்களுக்காகவே சில ஸ்பெஷலான டிப்ஸ், இதோ. 

1 /7

ஒரு மனிதன் எப்படி வளர்கிறான் என்பது, அவனது குழந்தை பருவத்தை வைத்தே அமையும் என்று கூறுவர். குழந்தைகள், அறிவாளியாக அமைவதும் பெற்றோர்கள் அவர்களை வளர்க்கும் முறை பொருத்தே இருக்கும். குழந்தைகள், களிமண் போன்றவர்கள் அவர்களுக்கு ஒரு உருவம் கொடுக்கும் வரை தானாக உருவம் பெற மாட்டார்கள். அவர்களை அறிவாளியாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!

2 /7

அதிக IQ நிறைந்த குழந்தைகள், இசை பயிற்சி பெற்றவர்களாக இருபார்களாம். இவர்களின் IQ அளவு, இசையினால் வளரும் என்றும் நம்பப்படுகிறது. இதனால், இவர்கள் பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்க வாய்ப்பிருக்கிறது. 

3 /7

குழந்தைகளுடன் புத்தம் படிக்கும் போது, பெற்றோர்கள் அவர்களுக்கு படித்து காண்பிக்க கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒன்றாக இணைந்து படிப்பதனால் அவர்களின் அறிவாற்றல் சீக்கிரமாகவே மேன்மை அடைய வாய்ப்புள்ளது. 

4 /7

நேரத்திற்கு உறங்க செல்வது, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லதுதான். சரியான உறக்கம் இல்லை என்றால், யாராலும் சரியாக செயல்பட முடியாது. எனவே, இரவில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை உறங்க வைப்பதும், காலையில் எழ வைப்படும் உங்களது வேலையாக இருக்க வேண்டும். 

5 /7

சுய ஒழுக்கம் இல்லாத அறிவு, குப்பையில் என்று கூறுவர். எனவே, குழந்தைகளுக்கு சுய ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும். உடலை எப்படி பார்த்துக்கொள்வது, எப்படி சுகாதாரமாக இருப்பது, பிறரிடம் எப்படி நடந்து கொள்வது உள்ளிட்ட பல பன்புகள் சுய ஒழுக்கத்திற்குள் அடங்கும். 

6 /7

குழந்தைகள், ஒவ்வொரு சாதனைகளை புரியும் போதும், அவர்களுக்கு ஏதேனும் பரிசு கொடுத்து மகிழ்விக்கலாம். இது, எப்போதும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எப்போதாவது இப்படி செய்யலாம். 

7 /7

மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகளின் IQவின் அளவு இயற்கையாகவே அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், கோபம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்தும் குழந்தைகள், மகிழ்ச்சியான குழந்தைகளாக மாறுகின்றனர். இவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதால் கற்றல் திறன் அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.